கலசத்தை பூஜிப்பது ஏன் ?
🌟 கலசம் என்பது கும்பம். கும்பத்தில் நீர் நிரப்பி ஒரு தேங்காயை வைத்து கும்பத்தை சுற்றி நூல்களால் கட்டப்படும் புனித கும்பமே கலசம். இந்த நீருக்கு அதிக சக்தி உண்டு.
🌟 கங்கையின் புனிதம் நிறைந்த நீர் போல் இந்த கலசத்தில் இருக்கும் நீருக்கு புனிதம் அதிகமாகும். கலசத்தை பூஜிப்பதற்கு ஒரு காரணம் உண்டு. அதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
🌟 விஷ்ணுவின் நாபிக் கமலத்திலிருந்து ஒரு தாமரை வெளிப்பட்டது. அந்த மலரிலிருந்து படைப்புக் கடவுளான பிரம்மா தோன்றினார். பிரம்மாவே உலகத்தை சிருஷ்டித்தார்.
🌟 கலசத்தில் உள்ள புனித நீரானது அனைத்திற்கும் உயிர் அளிக்கும் சக்தி படைத்தது. இந்த நீர் எண்ணிலடங்கா உருவங்களையும், வடிவங்களையும் உயிர்த் துடிப்பும், உணர்வும் உள்ள பொருள்கள் மற்றும் ஜடப் பொருள்கள் ஆகிய அனைத்தையும் படைக்கும் சக்தியை தன்னுள் அடக்கியுள்ளது.
🌟 கலசத்தில் உள்ள இலைகளும், தேங்காயும் சிருஷ்டியைக் குறிக்கின்றன. கலசத்தைச் சுற்றியுள்ள நு}ல் படைப்பில் உள்ள அனைத்தையும் ஒன்றாகப் பிணைக்கும் அன்பைக் குறிக்கிறது. ஆகவேதான் கலசம் புனிதமாகக் கருதப்பட்டு பூஜிக்கப்படுகிறது.
🌟 புனிதமான நதிகளின் நீர், அனைத்து வேதங்களின் சாரம் மற்றும் அனைத்து தேவதைகளின் ஆசி ஆகியவை கலசத்தில் உள்ள நீரில் வந்து சேரவேண்டுமென்று பிரார்த்திக்கப்படுகிறது. பின்னர், கலச நீர் அபிஷேகத்திற்கும் மற்ற சடங்குகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
🌟 கோவில் கும்பாபிஷேகத்தில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலசத்தில் உள்ள புனித நீர் ஆலய கோபுரக் கலசங்களின் மேல் ஊற்றப்படுகிறது.
🌟 அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடந்தபோது, அமுத கலசத்தை ஏந்தியவாறு இறைவன் தோன்றினார். இவ்வமுதம் அனைவருக்கும் இறவாவரத்தை அருளியது.
இந்த அற்புத நீர் நம்மீது படும்போது நமது ஆயுள் நீடிக்கும் ஆரோக்கியம் கூடும் என்பது ஐதீகம்.
நாம் செய்யும் அனைத்து நல்ல காரியங்கள்,விசேஷங்கள் சிறப்புற நடைபெற கலசம் வைத்து அதில் நாம் வணங்கும் தெய்வத்தை ஆவாகரணம் செய்து வழிபடுவது இந்துக்கள் செய்யக்கூடிய ஒன்றாகும்.
கலசம் என்பது என்ன?
மண் அல்லது செம்பு,பித்தளை,தாமிரம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட நீர் நிறைந்த ஒரு பாத்திரம்-செம்பு-சிறு பானைதான் கலசம் எனப்படுகிறது.
இந்த கலசத்தில் மாவிலைகள் செருகப்பட்டு நடுவில் ஒரு தேங்காய் வைக்கப்படும்.வெண்மை அல்லது சிவப்பு நிறமுள்ள நூல்கள் பானையின் கழுத்திலிருந்து முழுமையாக டயமண்ட் வடிவத்தை உருவாக்கும் வகையில் நுணுக்கமாக கட்டப்படுகிறது .பானையின் மேல் அழகான லக்ஷ்மி தேவியின் உருவத்தை வரைவது உண்டு.இந்த பானை கலசம் என்றழைக்கப்படுகிறது.
பூரண கும்பம்
கலத்தில் நீரோ அல்லது அரிசியோ நிரப்பப்படும்.இதற்கு பூரண கும்பம் என்றழைக்கப்படுகிறது.
கிரக பிரவேசம்,திருமணம்,விரத நாட்களில் கலசம் வைத்து வழிபடுவார்கள்.மேலும் விழா நடத்தப்படும் இடத்தின் நுழைவாயிலில் ,வருவோரை வரவேற்க்கும் வகையில் இக்கலசம் வைக்கப்படுகிறது.
பெரியோர்களை முக்கிய பிரமுகர்களை பூரண கும்பம் கொடுத்து வரவேற்பர்.
கலசம் வைத்து பூஜிப்பது ஏன்?
உலகை படைக்கும் முன் விஷ்ணு,பாற்கடலில் பாம்பணையின் மேல் சாய்ந்து அமர்ந்திருந்தார்.அவருடைய நாபிக் கமலத்திலிருந்து ஒரு தாமரை வெளிப்பட்டது.அந்த மலரிலிருந்து படைக்கும் கடவுளான பிரம்மதேவன் தோன்றினார்.பிரம்மாவே உலகத்தை சிருஷ்டித்தார்.
கலசத்தில் உள்ள நீரானது ,எந்த நீரிலிருந்து படைப்பில் உள்ள அனைத்தும் தோன்றியதோ,அந்த நீரைக் குறிக்கும்.அந்த புனித நீர்தான் அனைத்திற்கும் உயிர் அளிக்கும் சக்தி படைத்தது.இந்த நீர் எண்ணிலடங்கா உருவில்,வடிவில்,உயிர்த்துடிப்பும் உணர்வும் உள்ள பொருள்கள் மற்றும் ஜடப் பொருள்கள் ஆகிய அனைத்தையும் படைக்கும் சக்தியைத் தன்னுள் அடக்கியுள்ளது.
மேலும் உலகிலுள்ள மங்களமான அனைத்தையும் படைக்கும் சக்தி பெற்றது.கலசத்தில் வைக்கப்படும் மாவிலைகளும்,தேங்காயும் சிருஷ்டியைக் குறிக்கும்.கலசத்தில் சுற்றிய நூல் படைப்பில் உள்ள அனைத்தையும் ஒன்றாக பிணைக்கும் அன்பைக் குறிக்கிறது.ஆகவேதான் கலசம் புனிதமாக கருதி பூஜிக்கப்படுகிறது.
புனிதமான நதிகளின் நீர் அனைத்தும் வேதங்களின் சாரம் மற்றும் அனைத்து தேவதைகளின் ஆசி கலசத்தில் உள்ள நீரில் வந்து சேர வேண்டுமென்று பிரார்த்திக்க வேண்டும்.பின்னர் பூஜைகள் முடிந்தவுடன்,நம் வீட்டில் உள்ள எல்லா இடங்களிலும் புனித நீராக தெளிக்கப்படுகிறது.
ஆலய கும்பாபிஷேகங்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலசத்தில் உள்ள புனித நீரை ஆலய கோபுர கலசங்களின் மேல் ஊற்றப்படுகிறது .
நிறைகுடம்என்பது தமிழர் கலாசார அடையாளங்களில் ஒன்றாகும். தமிழரின் மங்கலப் பொருட்களுள் ஒன்றாக இது அமைகின்றது. நிறைவான குடம் எனும் பாெருளில் நிறைகுடம் எனப்படுகின்றது. முழுமையாக நீர் நிறைந்த கலசத்தில் மாவிலைகளைச் சொருகி அதன்மேல் முடி நன்கு சீவப்பட்ட தேங்காய் வைக்கப்படும். இதனோடு குத்துவிளக்கு, ஊதுபத்தி, திருநீறு, சந்தனம், குங்குமம் முதலிய மங்கலப் பொருட்களும் வைக்கப்பட்டு இவை யாவும் அரிசி அல்லது நெல் பரவிய வாழை இலையின் மேல் வைக்கப்படும்.
சைவத் தமிழ் மக்கள்; தங்கள் கலை, கலாச்சார, சமூக நிகழ்வுகளின் போதும், விசேஷ பண்டிகை கொண்டாட்டங்களின் போதும், சுபமங்கள சடங்குகள் நடைபெறும் போதும் நிறை குடம் வைத்து வரவேற்பதும், ஆராத்தி செய்வதும் ஆகம மரபு வழி வந்த வழக்கமாகும்.
சுப நாட்களில் வீட்டு வாசலில் நிறை குடம் வைப்பதன் மூலம் சகல செல்வங்களும் வீட்டில் நிரம்பப்பெற்று இருக்கும் எனவும் இதை மங்களத்தின் அறிகுறியாக இந்துக்கள் போற்றுகின்றார்கள். அத்துடன் நிறைகுடம் வைக்கும் இடத்தில் இலக்குமி வாசம் செய்வாள் (வருகை தருவாள்) என்பதும் இந்துக்களின் நம்பிக்கை.
நிறைகுடம் வைக்கத் தேவையான பொருட்கள்
1. நிறை குடம் (நீர் நிறைத்த குடம்)
2. சாணம் அல்லது மஞ்சளினால் செய்த பிள்ளையார் அல்லது பிள்ளையார் சிலை.
3. நெல் அல்லது பச்சரிசி
4. தலை வாழையிலை
5. முடித் தேங்காய் - 1
6. மாவிலை 5 அல்லது 7
7. குத்து விளக்கு 2
8. தேங்காய் எண்ணெய்
9. விளக்குத் திரி
10. விபூதி + கிண்ணம்
11. சந்தணம் + கிண்ணம்
12. குங்குமம் + கிண்ணம்
13. பன்னீர் + செம்பு
14. பலநிறப் பூக்கள்
15. வாழைப்பழம் - ஒரு சீப்பு
16. தேங்காகாய் – 1 உடைப்பதற்கு
17. வெற்றிலை 3
18. பாக்கு 3
19. சாம்பிராணி
நிறைகுடம் வைத்தல்
ஒரு மேசையைச் சுத்தம் செய்து, அதன்மீது சுத்தமான விரிப்பொன்றை விரிக்கவும். அதன்பின் அதன்மீது ஒரு தலைவாழை இலையை இலையின் நுனிப்பகுதி வடக்கு முகமாகவோ அல்லது கிழக்கு முகமாகவோ அமையுமாறு வைக்கவும். இம் முறை அவ்விடத்திற்கு பொருந்தாவிட்டால், பொதுவாக வரவேற்பு நிகழ்வாக இருந்தால் வருபவர்களுக்கு வலப்பக்கத்தில் இலையின் அகன்ற பகுதி இருக்கக் கூடியதாக வாழைஇலையை வைக்கவும்.
அதன் மேல் நெல் அல்லது அரிசி பரப்பி அதன்மேல் நீர் நிரப்பிய பித்தளை அல்லது சில்வரினால் ஆன கும்ப குடத்தை வைக்கவும். அதன் இரு பக்கங்களிலும் குத்துவிளக்கு ஒவ்வொன்று வைக்கவும். அதன் பின் ஐந்து மாவிலைகளை குடத்தின் வாயில் வைத்து சுத்தம் செய்து வைத்த முடித்தேங்காயை அதன் மேல் வைக்கவும், அமங்கல கிரியைகளுக்கு கும்பம் வைக்கும் போது மாத்திரம் மூன்று மாவிலைகள் வைப்பார்கள்.
ஒரு தட்டத்தில்(தட்டில்) வாழைப்பழச்சீப்பு ஒன்றும், வெற்றிலைபாக்கு (வெற்றிலை ஒற்றைவிழும் எண்ணில்), தேசிக்காய் ஒன்றும்(வைக்கலாம் அல்லது தவிர்க்கலாம்) கும்பத்தின் இடது பக்கத்தில் வைத்து அதனுள் மஞ்சளினால் செய்த பிள்ளையார் அல்லது சிறிய பிள்ளையார் சிலையையும் வைக்கவும்.
இன்னொரு தட்டத்தில் அல்லது தட்டில் சந்தனம், குங்குமம், பன்னீர்ச்செம்பு, விபூதி வைத்து வலப்பக்கத்தில் வைக்கவும். நிறைகுடத்திற்கு ஒரு மாலையும் போடலாம். அல்லது பூக்களினால் அலங்கரிக்கலாம். குத்து விளக்குகளிற்கும் பூக்கள் வைக்கலாம்.
நிகழ்வு ஆரம்பமாவதற்கு முதல் இரண்டு குத்து விளக்குகளிலும் திரிகளில் ஒவ்வொன்றையோ அல்லது ஐந்தையுமோ கொழுத்தி விடவும். ஒரு தேங்காயை உடைத்து கும்பத்தின் இரு பக்கங்களிலும் வைக்கவும். அத்துடன் தூபம் ஏற்றுதல் வேண்டும். ஒன்று அல்லது மூன்று சாம்பிறாணிக் குச்சிகளைக் கொழுத்தி வாழைப் பழத்தில் குத்தி விடலாம்.
ஆராத்தி எடுத்தல்:
மங்கள காரியங்களிற்கு ஆராத்தி எடுக்கும் போது சுமங்கலிப் பெண்கள் இருவர் கும்பத்திற்கு முன்னால் நின்று ஆராத்திக்குரியவரை கும்பத்தை பார்த்துக் கொண்டு நிற்கச் செய்து ஆராத்திக்கு உரியவரின் கீழ்ப் பக்கத்தில் ஆராத்தித் தட்டை வலது, இடது பக்கமாக மூன்று முறை ஆட்டி அதன்பின் ஆராத்திக் குரியவரின் வலது பக்கமாக மேலே உயர்த்தி இடது பக்கத்தால் கீழே இறக்கி மீண்டும் கீழே மூன்று முறை ஆட்டி திரும்பவும் இவ்வாறு மூன்று முறை செய்யவும்.
மூன்றாவது சுற்று இறுதியில் ஆராத்தித் தட்டை நடுவே கொண்டு வந்து திரி ஆராத்தியாயின் அவற்றை தட்டில்லுள்ள மஞ்சள்-குஞ்கும கலவையில் அமிழ்த்தி நூர்த்தபின் திரிக் கரியுடன் சேர்ந்த மஞ்சளை-குங்குமத்தை ஆராத்திக் குரியவரின் நெற்றியில் திலகமாக இட்டு திஷ்டி கழிக்க வேண்டும். இதனை ஆராத்தி எடுத்த சுமங்கலிப் பெண்கள் இருவரும் செய்தல் வேண்டும்.
அமங்கல கிரியைகளுக்கு மாத்திரம் உரியவருக்கு இடது பக்கமாக உயர்த்தி ஆராத்தி செய்வார்கள்.
மாவிலை கட்டுதல்:
மங்கள் வைபவங்களுக்கு பந்தலில் மாவிலை கட்டும்போது மாவிலையின் முன்பக்கத்திற்கு நூலை/கயிற்றை வைத்து முன்பக்கமாக மாவிலையை மடித்தல் வேண்டும்.
அமங்கல கிரியைகளின் போது மாத்திரம் மாவிலை பின்பக்கமாக மடிக்கப்படுகின்றது.
பூரண கும்பம்
உலகமும் அதிலுள்ள தாவர சங்கமப் பொருள்களும் சகல ஆத்மாக்களும் நீரிலிருந்தே உண்டாகின்றன. மறுபடியும் பிரளய காலத்தில் தண்ணீரிலேயே லயமாகி விடுவதாக வேதம் கூறுகின்றது. ஆகையால் ஆதிகர்த்தாவாகிய இறைவன் நீரின்மூலம் உருவ வழிபாட்டுக்குக் கொண்டுவருவதே பூரண கும்பத்தின் அர்த்தம்.
இப் பூரண கும்பத்தை மனித உடலாக பாவித்து அதில் இறைவனை தியான, ஜப, பிரார்தனையின்மூலம் யாக சாலையில் வைத்து யாகமும் பூஜைகளும் செய்யப்படுகின்றன. சக்தி வாய்ந்த ஸ்ரீ ஜாக்ஷரங்கள் கொண்ட மந்திரங்களில் கும்பநீர் சுத்தி செய்யப்பட்டு அதில் தெய்வ ஆவாகனம் செய்யப்படுகின்றது. இந்த நீர் கெடாதிருக்க, கராம்பு, ஜாதிக்காய், பச்சைக் கற்பூரம் , குங்குமப்பூ முதலிய திரையங்கள் சேர்க்கப்பட்டுகின்றன. அஷ்டலக்ஷ்மிகளின் கடாட்ஷம் நிறைந்திருக்க மாவிலைவைக்கப்படுகின்றது. தேங்காய், மஞ்சள், குங்குமம், பூ, தர்ப்பை, கூச்சம், ஸ்வர்ணம், அக்ஷதை ஆகிய எட்டு மங்களப் பொருள்களால் கும்பம் அலங்கரிக்கப்படுகின்றது.
கும்ப தத்துவம்
மங்கள காரியங்களுக்காக வைக்கப்படும் நிறைகுடத்தில் 5 மாவிலைகள் இடம் பெறுகின்றன. இவ் ஐந்து மாவிலைகளும் ஐம்புலன்களையும் நினைவு படுத்துவதாக அமைகின்றன. குடமும் நீரும் நமது உடலை நினைவு படுத்துவதாகும். நிறைகுடமாகிய பூரண கும்பத்தை ஒரு முழுமதியாக ஒப்பிட்டார் கம்பர். எப்படியிருப்பினும் மனித உடல் ஐம்புலன், சிரசு, இவறை அடக்கும் கருவியாக பூரணகும்பம் இடம்பெறுகின்றது. பூரண கும்பம் இல்லாத சடங்குகளே இல்லை என்றே கூறலாம்.சைவத் தமிழ் மக்கள்; தங்கள் கலை, கலாச்சார, சமூக நிகழ்வுகளின் போதும், விசேஷ பண்டிகை கொண்டாட்டங்களின் போதும், சுபமங்கள சடங்குகள் நடைபெறும் போதும் நிறை குடம் வைத்து வரவேற்பதும், ஆராத்தி செய்வதும் ஆகம மரபு வழி வந்த வழக்கமாகும்.தற்போது கிறித்தவர்களும் தமது வழிபாட்டுத் தலங்களின் திருவிழாக் காலங்களில் நிறைகுடம் வைப்பதைக் காணலாம்.
கலசம் என்பது என்ன? மண் அல்லது செம்பு, பித்தளை, தாமிரம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட நீர் நிறைந்த ஒரு பாத்திரம் - செம்பு - சிறுபானைதான் கலசம் எனப்படுகிறது. இந்தக் கலசத்தில் மாவிலைகள் செருகப்பட்டு, அவற்றின் நடுவில் ஒரு தேங்காய் வைக்கப்படும். வெண்மை அல்லது சிவப்பு நிறமுள்ள நூல்கள் பானையின் கழுத்திலிருந்து முழுமையாக டயமண்ட் வடிவத்தை உரு வாக்கும் வகையில் நுணுக்கமாகக் கட்டப்படுகிறது. பானையின் மேல் அழகான வடிவங்கள் வரையப்படுவதும் உண்டு.
இந்தப் பானை கலசம் என்றழைக்கப்படுகிறது. இது நீரினாலோ அல்லது அரிசியினாலோ நிரப்பப்படும். இது பூர்ண கும்பம் என்றழைக்கப்படுகிறது. இது போன்றே ஜடப்பொருளான நமது உடல் தெய்வீகமான சக்தியால் உயிர்பெறும் பொழுது அற்புதமான, போற்றத்தக்க செயல்களை செய்யக்கூடியதாக மாறுகிறது. மரபுப்படி நடத்தப் பெறும் கிருகப் பிரவேசம், திருமணம், தினசரி பூஜைகள் போன்ற சமயங்களில் இத்தகைய கலசம் வைக்கப்படுகிறது. மேலும், விழா நடத்தப்படும் இடத்தின் நுழைவாயிலில், வருவோரை வரவேற்கும் வகையில் இக்கலசத்தை வைக்கிறார்கள். பெரியோர்களையும் முக்கியப் பிரமுகர்களையும் பூரண கும்பம் கொடுத்து வரவேற்பது மரபு. பூஜிப்பது ஏன்? உலகைப் படைக்கும் முன் பகவான் விஷ்ணு, பாற்கடலில் பாம்பணையின் மேல் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தார்.
அவருடைய நாபிக் கமலத்திலிருந்து ஒரு தாமரை வெளிப்பட்டது. அந்த மலரிலிருந்து படைப்புக் கடவுளான பிரம்மா தோன்றினார். பிரம்மாவே உலகத்தை சிருஷ்டித்தார். கலசத்தில் உள்ள நீரானது, எந்த நீரிலிருந்து படைப்பில் உள்ள அனைத்தும் தோன்றியதோ, அந்த நீரைக் குறிக்கிறது. அந்தப் புனித நீர்தான் அனைத்திற்கும் உயிர் அளிக்கும் சக்தி படைத்தது. இந்த நீர் எண்ணிலடங்கா உருவங்களையும் வடிவங்களையும் உயிர்த் துடிப்பும் உணர்வும் உள்ள பொருள்கள் மற்றும் ஜடப் பொருள்கள் ஆகிய அனைத்தையும் படைக்கும் சக்தியைத் தன்னுள் அடக்கியுள்ளது. மேலும், உலகில் உள்ள மங்களகரமான அனைத்தையும் படைக்கும் சக்தியையும் பெற்றது, இது.
கலசத்தில் உள்ள இலைகளும் தேங்காயும் சிருஷ்டியைக் குறிக்கின்றன. கலசத்தைச் சுற்றியுள்ள நூல் படைப்பில் உள்ள அனைத்தையும் ஒன்றாகப் பிணைக்கும் அன்பைக் குறிக்கிறது. ஆகவேதான் கலசம் புனிதமாகக் கருதப்பட்டு பூஜிக்கப்படுகிறது. புனிதமான நதிகளின் நீர், அனைத்து வேதங்களின் சாரம் மற்றும் அனைத்து தேவதைகளின் ஆசி ஆகியவை கலசத்தில் உள்ள நீரில் வந்து சேரவேண்டுமென்று பிரார்த்திக்கப்படுகிறது. பின்னர், கலச நீர் அபிஷேகத்திற்கும் மற்ற சடங்குகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
ஆலய கும்பாபிஷேகத்தில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலசத்தில் உள்ள புனித நீர் ஆலய கோபுரக் கலசங்களின் மேல் ஊற்றப்படுகிறது. அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, அமுத கலசத்தை ஏந்தியவாறு இறைவன் தோன்றினார். இவ்வமுதம் அனைவருக்கும் இறவாவரத்தை அருளியது. எனவே, கலசமும் இறவாத் தன்மையைக் குறிக்கிறது. ஞானியர் என்போர் நிறை மனிதர்கள். இதற்குக் காரணம் அவர்கள் தங்களுடைய உண்மை சொரூபம், பூர்ணமான -எங்கும் நிறைந்த - பேருண்மையேயன்றி வேறில்லை என்பதை நன்கு உணர்ந்தவர்கள். அவர்கள் என்றும் குறைவற்ற மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்து விளங்குகின்றனர். உலகில் உள்ள மங்களகரமான அனைத்தையும் குறிப்பவர்களாக அவர்கள் விளங்குகின்றனர். அந்த நிறை மனிதர்களின் பெருமையைப் போற்றும் வகையில் பூர்ணகும்பத்துடன் அவர்கள் வரவேற்கப்பட்டனர். இது அவர்களிடத்து நமக்கு உள்ள பக்தி நிறைந்த மரியாதையை நாம் முழுமனதுடன் வெளிப்படுத்துவதன் அடையாளமாகும்.