வியாழன், 11 ஜூன், 2020

இப்பத்தான் பேசிக்கொண்டிருந்தோம் "ஆயுள் நூறு" என்பதுஎப்படி?

ஒருவரை பற்றி பேசிக்கொண்டு இருக்கும்போது அவர் எதிர்பாராமல் வந்துவிட்டால் அவரிடம் உம்மை பற்றி இப்பத்தான் பேசிக்கொண்டே இருந்தோம் உனக்கு 'ஆயுள் நூறு' என்று சொல்ல கேட்டு இருப்போம்
எப்படி இந்த சொல் வழக்கு வந்திருக்கும் என யோசித்ததுன்டா

ஆயுள் நூறு என்று வாழ்த்தும் போது யாருக்கும் மகிழ்ச்சி வரும் தானே

இரண்டு பேருக்குள் கூறியதால் எப்படி ஆயுள் கூடும்

ஒருவரை பற்றி கெட்டதாகவோ நல்லதாகவோ பேசுவதும் சிந்திப்பதும் நன்மையைதானே தரும்

ஒருவரை பற்றி பேச நண்பர்கள் உறவினர்கள் இருக்கும் போது எந்த ஆபத்திலும் உதவக்கூடும், ஆயுள் அதிகம் என கூறுவதும் இதனால் தான்.
இது குறித்து ஒரு கதை படித்தாய் ஞாபகம்
இரண்டு நண்பர்கள் அவர்களுடைய வியாபாத்தில் பங்காளியான மூன்றாம் நபர் ஒருவரை சதி செய்து கொல்லத்திட்டமிட்டனர் எதிர்பாராமல் அதனை மூன்றாம் நபர் முழுவதும் கேட்டு விட்டதால் சதி திட்டத்தில் இருந்து தப்பினார் இதனால் அவருக்கு ஆயுள் அதிகரித்தது என முடியும் அந்த கதை

நன்றி

பாரதி ஜோதிட நிலையம் மற்றும் திருமண தகவல் மையம் 





சனி, 16 மே, 2020

முலாம் பலத்தின் நன்மைகள்

பொதுவாக பழங்கள் என்றாலே உடலுக்கு மிகவும் சத்து அளிக்கக்கூடிய இயற்கை வரம் தான். இதில் முலாம் பழம் மிகச் சிறந்த பழமாகும். அதாவது உடல் உஷ்ணத்தை குறைத்து சிறுநீர் தாரையில் ஏற்படக்கூடிய எரிச்சலை போக்கி, வயிற்றுப் போக்கை குணப்படுத்தும் இது மிகுந்த சத்துக்களை உடலுக்கு அளிக்கிறது. இவ்வளவு பயன் கொண்ட முலாம் பழத்தின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் பற்றி அறிவோம்

மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்

வைட்டமின் ஏ, இரும்புசத்து, பொட்டாசியம் அதிக அளவில் உள்ளதால் மினரல் அதிகமிருக்கிறது. நோய்களைத் தடுக்கக் கூடியது மட்டுமல்லாமல் உடலுக்கு புத்துணர்வையும் அளிக்கிறது. சிறுநீர் தாரையில் ஏற்படக்கூடிய எரிச்சலை போக்கி உடலுக்கு குளிர்ச்சி அளிக்கிறது. இந்த பழத்தை தொடர்ந்து உண்டு வர மூல நோய் குணமாகி மலசிக்கல் நீங்கும். இதில் வைட்டமின் ஏ,பி, சி ஆகியவை இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். பித்தத்தை மொத்தமாகப் போக்கி, கண்ணுக்கு நல்ல பார்வை அளித்து உடல் வலுவை அதிகரிக்கும்.