சனி, 24 மார்ச், 2018

சர்ப்ப தோஷம் நீக்கும் காளகஸ்திரி

தொன்மையும், வரலாற்று பெருமையும் நிறைந்த எண்ணற்ற திருக்கோயில்களை தன்னகத்தே கொண்ட புனித நகரமாக பூவுலகில் விளங்குவது ‘‘திருக்குடந்தை’’ எனப்படும் கும்பகோணமாகும்! ‘‘சகல பாவங்களும் காசியில் கரையும்... காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் மறையும். கும்பகோணத்தில் செய்த பாவம் கும்பகோணத்திலேயே தீரும்...’’ என்பது பழங்காலம் தொட்டே வழக்கில் இருந்து வருகிறது. இப்புனித நகரில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘‘மகாமகம்’’ விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. திருக்குடந்தை நகரில் ஸ்ரீ ஆதிசங்கர் பகவத்பாதர் அமைந்த ‘‘திருமடம்’’ அமைந்துள்ள தெருவுக்கு ‘‘மடத்துத்தெரு’’ என்று பெயர். அங்கு சங்கரமடத்துக்கு பக்கத்திலேயே ஸ்ரீ காஞ்சி சங்கராச்சாரியாருக்காக தஞ்சை மன்னர் ‘‘சரபோஜி’’யால் நிறுவப்பட்டதாக ‘‘அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர்’’ கோயில் பற்றி கூறப்படுகின்றது. திருப்பதிக்கு அருகிலுள்ள காளஹஸ்தி க்ஷேத்திரத்ைத போலவே இதுவும் ‘‘ராகு-கேது’’ பரிகார ஸ்தலமாக விளங்குகின்றது.

ஆலயம் கிழக்கு நோக்கியுள்ளது. ஐந்தடுக்கு கொண்ட ராஜகோபுரம். கோபுர நுழைவாயிலில் இடப்புறம் ஆனைமுகக் கடவுளும், வலப்புறம் ஆறுமுகக் கடவுள் தண்டாயுதபாணியாகவும் எழுந்தருளியுள்ளனர். இவர்களை வணங்கி உள்ளே சென்றால் இரண்டாவது கோபுரம் வரை இடைப்பட்ட நடையில் இருபுறமும் உள்ள நந்தவனத்தில் ஆலயத்து இறைவனுக்குரிய நறுமலர்கள் பூத்துக் குலுங்கி மணம் வீசுகின்றது. இரண்டாவது கோபுரத்துள் நுழைந்தால் பலிபீடம், கொடிமரம், நந்திகேஸ்வரர் உள்ளார். வடபுறம் நடராஜர், சிவகாமசுந்தரியுடன் காட்சி தருகிறார். தென்புறம் சமயக்குரவர்கள் நால்வரும் அழகுற அமைந்துள்ளனர். இவர்களை தரிசித்து வலம்வரும்போது விநாயகப் பெருமான் கன்னி மூலையில் அருள்பாலிக்கின்றார்.

தனி சந்நதியிலுள்ள விநாயகர் சக்தி மிகுந்தவர். இவரை அடுத்து தனித்தனி சந்நதிகளில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர், காசி விஸ்வநாதர்-விசாலாட்சி அருள்பாலிக்கின்றார்கள். அடுத்து வள்ளி-தேவசேனா சமேதராக சுப்ரமணியசுவாமி தனிச் சந்நதியில் அருள்பாலிக்கின்றார். அவருக்கு அடுத்து ஸ்ரீ துர்காதேவி, ஸ்ரீ லக்ஷ்மி, ஸ்ரீ சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரும் அருகருகே ஒரே சந்நிதியில் வழிபடுவோருக்கு அனைத்து நலன்களையும் வழங்கி அருட்காட்சி தருகிறார்கள். அன்னை மகாலட்சுமி அமர்ந்த திருக்கோலத்தில் அருளும், பொருளும் தந்து அருள்பாலிக்கிறாள். அடுத்து வடபுறகோட்டத்தில் அஷ்டதச புஜ துர்க்கை பதினெட்டு கரங்களுடன் சர்வ சக்தியாக விளங்குகிறாள்.

வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகள் ராகுகாலத்தில் அர்ச்சனை செய்து வழிபடுபவர்கள் ஏராளம். அதுவும் ஒன்பது ஞாயிற்றுக்கிழமைகளில் அர்ச்சனை செய்து வழிபடுவோருக்கு அனைத்து பீடைகளும் தீயிலிட்ட பஞ்சு போல் ஆகி விடும். ஒன்பது வெள்ளிக்கிழமைகளில் நெய்யில் எலுமிச்சம்பழ விளக்கேற்றினால் திருமணத்தடை நீங்கி திருமணம் நடைபெறும். அடுத்து ஜுரஹரேஸ்வரர்... விடாது ஜுரம் பிடித்தால் இவருக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்து, புழுங்கலரிசி கஞ்சி, மிளகு ரசம், பருப்பு துவையல் நிவேதனம் செய்து வில்வதளத்தால் அர்ச்சனை செய்தால் ஜுரம் பிடித்தவருக்கு ஜுரம் நீங்கி நலம் பெறுவதும் உண்மை. பின்னர் நவகிரகங்கள், பைரவர் இவர்களுடன் தனியாக ஒரு ‘‘ராகு பகவான்’’ உள்ளார். ராகுகாலத்தில் இந்த ராகு பகவானை வணங்கி தொழுவதால் ‘‘ராகு தோஷங்கள்’’ நிவர்த்தியாகும். பின்னர் ஆஞ்சநேயர் தனிச் சந்நதியில் அருள்பாலிக்கின்றார்.

அடுத்து மஹா மண்டபத்தில் நுழைந்தால் ஆலயத்தின் பிரதான சந்நதியில் அருள்மிகு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் ஆதி அந்தமில்லாத மூல முதல்வராய் லிங்கத் திருமேனியாக அருள்பாலிக்கின்றார். இந்த லிங்கத் திருவுருவானது ‘‘பிரம்மா, விஷ்ணு, சிவ’’ ஐக்கியமாக திகழ்கின்றது. இந்த இறைவனை வணங்கும்போது மும்மூர்த்திகளையும் வணங்கிய பேறு கிட்டும். காளஹஸ்தீஸ்வரரை பற்றிய சிறப்புச் செய்திகளும் உண்டு. ராகு-கேது தோஷ நிவர்த்திக்கு திருக்காளத்திக்கு செல்ல இயலாதவர்கள் இங்கு அந்தப் பரிகாரத்தை செய்து அளவற்ற நற்பயனை பெருகிறார்கள். அதே மகா மண்டபத்திலிருந்து வலப்பக்கம் திரும்பினால் அன்னை பராசக்தி அருள்மிகு ‘‘ஞானாம்பிகை’’ எனும் திருநாமத்தோடு அருள்பாலிக்கிறாள். தெற்கு நோக்கிய திருமுகம் இம்மையும், மறுமையும் அளுரும் அம்பாள் அபயஹஸ்தமும், மலரும், அக்ஷ்ய மாலையும் ஏந்திய திருக்கரங்களுடன் கருணையே வடிவாக அருள்பாலித்து வருகின்றாள்.

இங்கு உற்சவமூர்த்தியாக விளங்கும் ஸ்ரீ காத்யாயினி சமேத, கல்யாண சுந்தரேஸ்வரர் அம்பாள் சந்நிதிக்கு அருகில் தனியாகக் கோயில்
கொண்டுள்ளனர்கள். மேலும் சோமாஸ்கந்தருக்கு மூன்று அம்பாள் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இக்கோயிலுக்கு அருகிலுள்ள காவிரியின் பகவத் படித்துறைதான் தீர்த்தம். ‘‘பலா மரம்’’ ஸ்தல விருட்சம். இக்கோயிலில் ஐந்து கால பூஜை மிக சிறப்பாக நடைபெறுகின்றது. காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 8.30 வரை. திருக்கோயிலின் நடை திறந்திருக்கும்.
 

வெள்ளி, 23 மார்ச், 2018

கடன் ஏன்

கடன் ஏன், எப்படி?

கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கடன்பட்டவர்களின் மனவேதனையைப் பற்றி முன்பெல்லாம் சொல்வார்கள். ஆனால் தற்காலத்தில் எங்கும் கடன், எதற்கும் கடன் என்ற சூழ்நிலை நிலவுகிறது. நமக்கு ஜாதக கிரக அம்சத்தின் பலம் காரணமாக நம் எண்ணங்கள், கனவுகள், ஆசைகள், திட்டங்கள் எல்லாம் சரியாக நடைபெறும்போது, அதாவது நாம் ஏறுமுகத்தில் இருக்கும்பொழுது நமக்கு நிற்க நேரம் இருக்காது. நம் திறமையினால் சரியாக காய் நகர்த்தி வெற்றி பெறுகிறோம் என்ற மமகாரம், செருக்கு ஏற்படும். அதேநேரத்தில் சரிவுகள் ஏற்படத் தொடங்கியவுடன் டென்ஷன், கோபதாபங்கள் உண்டாகின்றன. எங்கும் எதிலும் நஷ்டம்,  முடக்கம் ஏற்பட்டவுடன்தான் நமக்கு கிரகம், ஜாதகம் போன்றவை நினைவுக்கு வருகின்றன. எப்பொழுது நம் கணக்குகள் சரியாக அமையாதபோது, நம் முயற்சிகள் தோல்வியைத் தழுவும்போது அதில் கிரகங்களின் கால, தசா செயல்பாடுகள் இருக்கின்றன என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இன்றைய காலகட்டத்தில் பணம் மிகவும் இன்றியமையாதத் தேவையாகி விட்டது. எல்லா தரப்பு மக்களுக்கும் பணத்தேவை அதிகரித்துக்கொண்டே போகின்றன. ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர், பரம்பரையாகச் செல்வச் செழிப்பு உள்ளவர்கள், நிரந்தர வருமானம் உள்ளவர்கள், மகா பாக்கியவான்களைத் தவிர மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் கடன்சுமை ஏற்பட்டு விடுகிறது. இதில் சுப விரயமும், அசுப விரயமும் அடங்கும். ஒருசிலர் வருமானத்திற்கு ஏற்ப அகலக்கால் வைக்காமல் வாழ்க்கையை நடத்துவார்கள். சிலர், வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று கடன் மேல் கடன் வாங்கி பிறரை ஒப்பிட்டு அவர்கள்போல வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். தேவையற்றதை வாங்கினால் தேவையுள்ளதை விற்க வேண்டி வரும் என்பது பிறகுதான் அவர்களுக்குப் புரியும். 

வாழ்க்கை அமைப்பு முறையில் சுபவிரயம் என்ற வகையில் முதலில் அடிப்படை செலவுகள், கல்விக் கடன், மகன், மகள் திருமணம், வளைகாப்பு, பிரசவம், வீடு கட்ட, நிலம் வாங்க, தொழில் தொடங்க, அபிவிருத்தி செய்ய, நகைகள், கார், வீண் ஆடம்பரம், வெளியூர்ப் பயணங்கள், உல்லாச, ஆன்மிக சுற்றுலாக்கள் போன்ற செலவுகளால் கடன்சுமை ஏற்படுகின்றது. அசுபவிரயம் என்ற வகையில் நோய், விபத்து, வரவுக்கு மேல் செலவு, தகாத பழக்க வழக்கங்கள், நீடித்த மருத்துவச் செலவுகள், தொழில் முடக்கம், நஷ்டம், வராத பாக்கிகள், திருமண வாழ்வில் குழப்பங்கள், வழக்குகள், வீண் வீம்புகள், தகாத சேர்க்கைகள், குடும்ப சுமை, பிள்ளைகளின் பொறுப்பற்ற செயல்கள் என பல விஷயங்கள் தேவையற்ற மனஉளைச்சலையும், கடன் சுமையையும் நமக்கு ஏற்படுத்துகின்றன. 

ஜாதக பலம், தசா மாற்றம் என்று எதாவது வகையில் திடீர் யோகம் உள்ளவர்கள், கடனில் இருந்து மீண்டு வந்துவிடுகிறார்கள். ஆனால் பெரும்பான்மையானவர்களுக்கு ஏணியில் ஏறுவதும், பாம்பில் இறங்குவதுமாக பரமபத விளையாட்டைப் போன்ற நிலையே தொடர்ந்து வாழ்க்கை முழுவதும் நீடிக்கிறது. சிலர் அகலக்கால் வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் கடன் தொல்லைகளில் இருந்து மீள முடியாமல் உருட்டல், மிரட்டல் என்று தவறான முடிவுகளுக்குச் சென்றுவிடுகிறார்கள். வீடு, வாசல், சொத்து சுகங்களை இழந்து தெருவுக்கு வரும் அளவுக்கு கிரகங்கள் சிலரை ஆட்டிப் படைக்கின்றன.

கிரகங்களும்  நேரம் காலமும்:

நம் வாழ்க்கை என்பது கிரக சுழற்சிகளின் மூலம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விஷயமாகும். பல முக்கியமான விஷயங்களை சில சூட்சுமமான சக்திகள் நடத்தி வைக்கின்றன. அந்த விஷயங்கள் கிரக செயல்பாடுகள் மூலம் நமக்கு தெரிய வருகின்றது. திடீர் வீழ்ச்சி, கடன் சுமை, தீராத நோய் என நம்முடைய சக்திக்கு மீறி நடப்பது கிரக சேர்க்கைகள் மூலம் உண்டாகும் அமைப்பாகும். லக்னம், இரண்டாம் இடம், நான்காம் இடம், ஐந்தாம் இடம், ஒன்பதாம் இடம், பதினோறாம் இடம் ஆகியவை நல்ல அம்சத்தில் இருந்தால் கடன்களால் தொல்லை இருக்காது, வரவும் வராது, வந்தாலும் வாழ்வாதாரத்தை  பாதிக்காது. ஏதாவது ஒரு வகையில் அவர்களின் பிரச்னைகள் தீர்ந்துவிடும். 

தனஸ்தானமான இரண்டாம் இடத்தில் நீச்ச, சுபமற்ற கிரகங்கள் இருந்து தசா நடத்துவது, 6, 8, 12ம் அதிபதிகள் சம்பந்தப்படுவது போன்றவைதான் ஒருவருக்கு பல கஷ்ட, நஷ்டங்களைத் தருகின்றன. தனகாரகன் குரு, நீசம் மற்றும் பல குறைபாடுகளுடன் இருந்தால் பொருளாதாரம் பாதிக்கப்படும். நீச்ச கிரகங்களான ராகு, கேது, செவ்வாய் போன்றவை சரியான யோக அமைப்பில் இல்லாமல் சனியுடன் சம்பந்தப்படும்போது பல பாதிப்புக்கள் உண்டாகின்றன. காரணம் சனி கர்ம காரகன். நம் கர்ம கணக்கின்படி கேது மூலம் பல இன்னல்கள் நமக்கு ஏற்படுகின்றன. சந்திரன், கேது சம்பந்தப்படும்போது விரக்தி மனஉளைச்சல், அலைச்சல் என்று மனரீதியான குழப்பங்கள் மூலம் நமக்கு இடையூறுகள் வருகின்றன.

சுமுகமாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையில் திடீர் வீழ்ச்சி, கடன், பண நஷ்டம், சொத்து இழப்பு உண்டாவதற்கு அந்தக்கால கட்டத்தில் நடைபெறும் தசா புக்திகளே காரணம். 6, 8, 12ம் இடம் சம்பந்தப்பட்ட தசா புக்திகளில் பலவகையான பிரச்னைகள் தலைதூக்கும். ஆறாம் அதிபதி லக்னாதிபதி, லக்னத்துடன் சம்பந்தப்படும்போது தவறான அணுகுமுறையால் கடனில் சிக்க வேண்டிவரும். உடல்நலமும் பாதிக்கப்படும். இரண்டாம் அதிபதியுடன் சம்பந்தப்படும்போது சுப, அசுப செலவுகள் வரும். குடும்பத்தில் பிரிவினை, மருத்துவ செலவுகள் உண்டாகும். மூன்றாம் அதிபதியுடன் சம்பந்தப்படும் போது சொந்த பந்தங்கள், சகோதர உறவுகளால் மனமுறிவு, கடன் வரும். நான்காம் அதிபதியுடன் சம்பந்தப்படும்போது சொத்து பிரச்னை, தாய், தாய் வழி சொந்தங்களால் மனஉளைச்சல், நிலபுலன்கள், விவசாயம், கல்வி என பல வகைகளில் கடன் வந்து பற்றும். 

ஐந்தாம் அதிபதியுடன் சம்பந்தப்படும்போது சுபசெலவுகள், சொத்துகளை மாற்றி அமைப்பது, பிள்ளைகள் மூலம் செலவுகள் அதனால் கடன் என்று வரலாம். ஏழாம் அதிபதியுடன் சம்பந்தப்படும்போது நண்பர்கள், கூட்டுத்தொழிலில் விரயங்கள் வரும். மனைவி வகையில் கருத்து வேறுபாடுகள், மருத்துவ செலவுகள் இருக்கும். வழக்குகள், விபத்துகள் மூலம் நிம்மதி, இழப்பு வரும். எட்டாம் அதிபதியுடன் சம்பந்தப்பட்டால் வழக்கு, மறதி, பொருட்கள் களவு போவது, அபராதம், எதிர்பாராத துக்க சம்பவங்கள் நிகழும். ஒன்பதாம் அதிபதியுடன் சம்பந்தப்பட்டால் சொத்து, பாகப்பிரிவினை தகராறுகள், நிலம் சம்பந்தமாக வழக்குகள், ஒரு சொத்தை விற்று வேறு சொத்து வாங்குவது என்று இருக்கும். பத்தாம் அதிபதியுடன் சம்பந்தப்படும்போது வேலை, தொழில், வியாபாரம் போன்றவற்றில் நஷ்டம், இழப்பு, கடன் என்று சுமை கூடும். உத்யோகத்தில் இடமாற்றம், பதவி இறக்கம், ஊர் மாற்றம், துறை சார்ந்த வழக்குகள் என்று தன, பண பிரச்னையால் கடன் விளையும்.

சாந்தி பரிகாரம்:

எல்லாவற்றிற்கும் நிவாரணம், சாந்தி, தடை நீக்குதல் என சாஸ்திரத்தில் பல பரிகார முறைகள் சொல்லப்பட்டுள்ளன. கடவுள் வழிபாட்டில் நட்சத்திரம், திதி, விரதம், விசேஷ தினங்கள் என பல நேர்த்திக் கடன்கள், வழிபாடுகள் செய்கிறோம். ஜாதகத்தில் உள்ள ஒவ்வொரு பிரச்னைக்கும், அதை அகற்றுவதற்கான பரிகார ஸ்தலங்கள் உள்ளன. இதைத்தவிர வைதீக ஹோம பரிகாரம், யந்திர பரிகாரம் தாந்திரீக முடிவுகளை எல்லாம் சித்தர்கள், சப்தரிஷிகள் தங்கள் நாடிகளில் சாந்தி பரிகார காண்டங்களில் சொல்லி இருக்கிறார்கள். சில பரிகாரங்கள் பொதுவானவை. சில பரிகாரங்கள் ஒவ்வொரு ஜாதகத்துக்கும் ஒவ்வொரு மாதிரியாக அமையும். கிரக அமைப்பு, கர்ம வினை, செய்வினைக்கேற்ப தனிப்பட்டவர்களுக்கு அதற்குண்டான சரியான பரிகார முறைகள் பலன் தரும். 

பலவகையான பழமரங்கள் உள்ளன. இவையெல்லாம் நமக்கு எல்லாக் காலத்திலும் பழங்களைத் தருவதில்லை. ஒவ்வொரு மரமும் அதற்குண்டான கால, நேர, பருவம் வரும்போதுதான் பூத்து, காய்த்து, கனிகளைத் தருகிறது. அதைப்போலவே நம்முடைய வாழ்க்கையிலும் எல்லாவற்றிற்கும் வேளை என்று ஒன்று வரவேண்டும். அந்த நேரத்தை நமக்கு அமைத்து வழிகாட்டுவதும் கிரகங்களே. பொதுவான பரிகாரங்களில் நமக்கு கடன்சுமை அதிகமாக இருந்தால் அந்தக் கடனில் அசல் தொகையில் ஒரு பகுதியை செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஓரை, ராகு காலம் அல்லது எமகண்டத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டும். நீங்கள் எந்த கிழமையில் பிறந்தீர்களோ அந்தக் கிழமையில் வரும் குளிகன் நேரத்திலும் கடன் தொகையை திருப்பி செலுத்தலாம். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியிலும் கடனை பைசல் செய்யலாம். 

பொதுவாக சுப விஷயங்களுக்கு சித்த யோகம், அமிர்த யோகம் பார்ப்பார்கள். ஆனால், நாம் வாங்கியுள்ள கடனை முடிவுக்குக் கொண்டுவர  மரண யோகம் மிகச் சிறந்தது. மரண யோகம் இருக்கும் நாளில் நீங்கள் ஒரு பகுதி கடனை திருப்பி செலுத்தினால் கடன் சுமை குறைய நல்ல வழி பிறக்கும். மரண யோகத்தில் யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது. பொன், பொருளை  இரவில் கொடுக்கக் கூடாது. இதைத் தவிர மைத்ர  முகூர்த்தம் என்று ஒன்று உள்ளது. அது அவரவர் தனிப்பட்ட ஜாதக அமைப்பைப் பார்த்து செய்யக்கூடிய பரிகாரம். பணம் வீணாக செலவு ஆவதை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாதமும் வளர்பிறை திருதியை அன்று இயன்ற அளவு அன்னதானம் செய்யலாம். 

வளர்பிறை வெள்ளிக்கிழமை கல் உப்பு வாங்கி வீட்டில் வைத்து பயன்படுத்தலாம். அஸ்வினி, மகம் மூலம் நட்சத்திர நாட்களில் வறுமையில் வாடுபவர்களுக்கு போர்வை வாங்கித் தரலாம். தேய்பிறை செவ்வாய்க்கிழமையன்று பசுமாட்டிற்கு கீரை, பழங்கள் தரலாம். பொதுப் பரிகாரங்கள் தவிர ஒவ்வொருவரின் ஜாதக அமைப்பின்படி எந்தக் கிரகக் கோளாறினால் ருண, ரோக, சத்ரு தொல்லை ஏற்பட்டுள்ளது, எந்த தசாவினால் பாதிப்பு உண்டாகி இருக்கிறது என்பதை ஆராய்ந்து அதற்குண்டான பரிகாரத்தை மேற்கொள்வதன் மூலம் உங்கள் கடன் விரைவில் தீரும். 
சனீஸ்வரன் பிடியிலிருந்து தப்பிக்க:

காக்கை சனி பகவானின் வாகனம்.காக்கைக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தரும்.காக்கைகளில் நூபூரம், பரிமளம், மணிக்காக்கை, அண்டங்காக்கை என சில வகைகள் உண்டு.காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்தப் பறவைகளிடமும் காண முடியாது.எமதர்மராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவார் என்பது நம்பிக்கை.

அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம். எமனும் சனியும் சகோதரர்கள் ஆவர். அதனால்,காக்கைக்கு உணவிடுவதால் ஒரே சமயத்தில் எமனும் சனியும்திருப்தியடைவதாகக் கருதப்படுகிறது. தந்திரமான குணம் கொண்ட காக்கை காலையில் நாம் எழுவதற்கு முன்,காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும்.குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கும் சுமங்கலி பெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம்.

தினமும் உலர்திராட்சை ஒருகைப்பிடி அளவுக்கு காலையில் காகத்திற்கு அளிக்க வேண்டும்.காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும் போது , உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள்,விபத்துக்கள்,வீண் பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது.

செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப் பக்கமே வராது. தீராத கடன் தொல்லைகள், புத்திர சந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான பலன்களையும், உங்கள் நியாயமான ஆசைகளும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது , உங்கள் முன்னோர் வழிபாடுதான். உங்கள் முன்னோர்களுக்கே, நீங்கள் உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமான சக்தியை உங்களுக்கு அளிக்கவல்லது காகம். 

திறந்த வெளியில் தரையைத் தூய்மையாக மெழுகிக் கோலமிடுவார்கள். அங்கே வாழை இலையைப் பரப்பி அதில் வண்ண வண்ண சித்ரான்னங்களை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற கணக்கில் கைப்பிடி அளவு எடுத்து வைத்து, காக்கைகளை கா…கா…என்று குரல் கொடுத்து அழைப்பார்கள். அவர்களின் அழைப்பினை ஏற்று காக்கைகளும் பறந்து வரும். அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும்.

வாழை இலையில் உள்ள அன்னங்களைச் சுவைக்கும்.அந்தக் காக்கைகள் உணவினைச் சாப்பிட்டுச் சென்றதும், அந்த வாழை இலையில் பொரி, பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள், வெற்றிலைப் பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள். இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை.தன் உடன் பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க, தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத் திகழ இந்த காணுப்பிடி பூஜையைச் செய்கிறார்கள்.

இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள். மறைந்த முன்னோர்கள் காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர். இதனால் பித்ருக்களின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை. மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனி பகவானைத் திருப்திப்படுத்தியதாகவும் கருதுகிறார்கள். 

நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கிக் கரைந்தால் நல்ல பலன் உண்டு. வீடு தேடி காகங்கள் வந்து கரைந்தால் அதற்கு உடனே உணவிடவேண்டும். எனவே,காக்கை வழிபாடு செய்வதால் சனிபகவான்,எமன் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப் பெற்று மகிழ்வுடன் வாழலாம்.

குலதெய்வம்

குலதெய்வம்
=========
பல வீடுகளில் எங்கு எல்லாம் கோவிலுக்கு போகிறார்களே அங்கு எல்லாம் இவர்கள் ஒரு சாமி படத்தையும் விடாமல் வாங்கி வந்து மாட்டிவிடுவார்கள். இன்னும் சில வீடுகளில் ஏகப்பட்ட சிலைகளை வாங்கி வந்து வைத்திருப்பார்கள்.

உங்கள் வீடுகளில் உள்ள பூஜை அறைகளில் உங்கள் குலதெய்வத்தின் படம் தான் முதலில் இடம் பெற வேண்டும். உங்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வத்தின் படம் இருக்கலாம். தேவையற்ற படத்தை மாட்டிவைக்காதீர்கள். எல்லா சாமி படங்களையும் நீங்கள் மாட்டி வைத்தீர்கள் என்றால் நீங்கள் தினமும் அனைத்துக்கும் பூஜை செய்ய வேண்டும். உங்களுக்கு இருக்கும் வேலை காரணமாக நீங்கள் தினமும் பூஜை செய்ய முடியாமல் போகும்.

கோரமாக இருக்கும் தெய்வங்களின் போட்டோவை வைக்கக் கூடாது. அவ்வாறு செய்வதும் தவறு. அவர்களை சாந்தபடுத்துவது என்பது மிக கடினமான ஒன்றாக இருக்கும்.நீங்கள் சிலை வழிபாட்டை வீட்டில் அனுமதிக்காதீர்கள். வீடுகளில் சிலை இருக்ககூடாது.

பல சாமி போட்டோ வைத்து இருக்கும் வீடுகளில், குலதெய்வத்தை பல பேர் மறந்துவிடுகிறார்கள்.

நீங்கள் எவ்வளவு கடவுளை வழிபட்டாலும் குலதெய்வ அருள் இல்லை என்றால் நீங்கள் வாழும் வாழ்க்கையில் ஒரு திருப்தி இருக்காது. ஏதாவது ஒரு குறை இருந்துகொண்டே இருக்கும்.

பூஜை அறையில் நீங்கள் அமர்ந்து கொண்டு பூஜை செய்யுங்கள். அமரும் போது ஏதாவது ஒரு விரிப்பில் அமருங்கள் உங்களின் உடம்பு பூமியில் தொடக்கூடாது. உங்களின் குறைகளை உங்களின் குலதெய்வத்திடம் சொல்லி வேண்டுங்கள் அனைத்து குறைகளையும் அந்த குலதெய்வம் உங்களுக்கு தீர்த்துவைக்கும். உங்கள் கூடவே அது வரும். நாட்கள் ஆக ஆக தான் அதன் அருமை புரியும்.

பூஜை அறையில் நீங்கள் காமாட்சி விளக்கை பயன்படுத்துங்கள். விளக்கின் திரி கிழக்கு முகமாக அல்லது வடக்கு முகமாக இருக்கலாம். அவ்வாறு திரி எரியும் போது உங்களின் குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.

வீட்டை நன்றாக சுத்தம் செய்து நறுமண வாசனை வரும்படி வைத்துக்கொள்ளுங்கள்.

அமாவாசை குலதெய்வ வழிபாடு

குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிட முடியாது. குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது

அமாவாசை அன்று உங்கள் குல தெய்வம் கோவிலுக்கு சென்று விளக்குஎண்ணெய் ஊற்றி இரண்டு மண்விளக்கு ஏற்றி ஒரு எலுமிச்சபழம்த்தை கோவிலில் உள்ள சூலாயுதத்தில் குத்தி வைத்து உங்கள் குல தெய்வத்தை வழிபாடு செய்தால் நமது நீண்ட நாட்களாக நினைத்து வந்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் உங்கள் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு ஏற்படும்.இந்த வழிபாடு தொடருந்து செய்து வருவது மிகவும் நல்லது
.
குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும். வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை

புதன், 21 மார்ச், 2018

வீட்டில் பணம் தங்கவில்லையா? என்ன சொல்கிறது வாஸ்து

bharathegopu.business.site

வீட்டில் பணம் தங்கவில்லையா? என்ன சொல்கிறது வாஸ்து



வீட்டில் எவ்வளவு பணம் வந்தாலும் தங்கவில்லை...விரையச் செலவு அதிகமாக ஆகிறதே...என்ன தான் செய்வது, வீட்டை மாற்றி விடலாமா, இல்லை ஏதேனும் நல்ல ஜோதிடரை அணுகலாமா என்று புலம்புபவர்கள் அதிகம்...
எதற்காக இப்படி? யோசிக்க வேண்டிய விஷயம். வாடகை வீடு என்றால் மாற்றி விடலாம்..சொந்த வீடு என்றால் எப்படி மாற்ற முடியும்...சரி அப்படி என்ன தான் பிரச்னை. நாம் ஏதேனும் தவறுகள் செய்கிறோமோ? சரி விஷயத்திற்கு வருவோம்.
ஒருவரது வீட்டில் செல்வம் நிலைக்காமல் இருக்கிறது என்றால், அந்த வீட்டில் எதிர்மறையான ஆற்றலை ஈர்க்கும் விஷயங்கள் ஏதோ உள்ளதாக வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகின்றது. வாஸ்து சாஸ்திரம் கூறுவதைப் போல நமது வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும்படி, இருக்கும் அந்தத் தவறான செயல்பாடுகள் என்ன தெரியுமா?
பெரும்பாலும் ஒரு வீட்டின் லட்சுமி கடாட்சம் எங்கு நிறைந்திருக்கும் என்றால் அது நம் வீட்டின் பூஜை அறையில் தான். நமது வீட்டுப் பூஜை அறை சரியான திசையில் அமைக்கப்பட்டுள்ளதா  என்று கவனிக்க வேண்டும். பின்னர், பூஜை அறையில் வைக்கப்பட்டுள்ள சாமி சிலைகளை கவனிக்க வேண்டும். இரண்டு தெய்வங்களின் சிலைகளை எதிரெதிரே பார்த்தவாறு வைத்தல் கூடாது. ஏனெனில் இதனால் நமது வீட்டில் செலவுகள் அதிகரித்து, வருமானம் குறைந்துவிடும் என்கிறது வாஸ்து.
வீட்டில் உடைந்த கண்ணாடி அல்லது வேறு கண்ணாடி பொருட்கள் மற்றும் விரிசல் அடைந்த கண்ணாடி ஆகியவற்றை வைத்திருக்கக் கூடாது. இவைகள் நமது வீட்டில் நிதி சிக்கல்களை ஏற்படுத்துமாம். உடைந்த சாமி சிலைகள் அல்லது கடவுளின் கிழிந்த புகைப்படங்கள் இது போன்றவை வீட்டின் உட்புறம் மடித்து வைப்பதோ அல்லது தனியாக எடுத்து வைப்பதோ கூடாது. இவைகள் வீட்டின் பொருளாதார பிரச்னைகளை அதிகரிக்கும்.
வீட்டினுள் வளர்ப்பதற்கென்று உள்ள செடிகள் மட்டுமே வீட்டின் உள் பகுதியில் வைக்க வேண்டும். முட்கள் நிறைந்த செடிகளை வீட்டினுள் வைத்து வளர்க்காமல், வீட்டின் வெளிப்பகுதியில் வைத்து வளர்க்கலாம். ஏனெனில் இது நமது வீட்டில் பணப் பற்றாக்குறையை ஏற்படுத்தும்.
மேலும், நமது வீட்டில் பழுதடைந்த பொருட்களைக் கடையில் போடுவதற்கு மனமின்றி அப்படியே பரனை மேல் போட்டு வைக்கக்கூடாது. உதாரணமாக எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதடைந்த நிலையில் இருந்தால், அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும், இல்லையெனில் வெளியே அகற்றி விடுவது நல்லது. ஏனெனில் அவை நமது வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்தும்.
வீட்டினுள் எந்தப் பொருளை எங்கு வைக்கலாம், எந்தத் திசையில் வைத்தால் நல்லது என்று நமக்குத் தெரியவில்லை என்றாலும், தெரிந்தவர்களிடம் கேட்டு அதன்படி செயல்படுத்தினால் வீட்டில் எந்தவித பிரச்னையும், பொருள் இழப்பும் இன்றி வாழ்க்கை சுமூகமாக நடத்தலாம் என்கிறது வாஸ்து சாஸ்திரம்
வீடு கட்டும் யோகம் யாருக்கு






பூமிக்காரகன்ன் செவ்வாயின் நிலையையும் சம்பந்தப்பட்டவரின் ஜாதகத்தில் பார்க்க வேண்டும். நிலம் வாங்கி வீடு கட்டும் யோகம் அனைவருக்கும் அமையாது.

பலர் கட்டிய வீட்டை வாங்குவார்கள். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே நிலம் வாங்கி வீடு கட்டும் யோகம் கிடைக்கும். அதற்கு செவ்வாய், சுக்கிரன் இரண்டு கிரகமும் நன்றாக இருக்க வேண்டும்.


வீடு கட்டும் யோகம்

ஜாதகத்தின் ராசிகட்டத்தில் நான்காம் வீட்டின் அதிபதி ஆட்சி/உச்சம் பெற்று அந்த கிரகத்தின் திசை நடைபெற்றால் கட்டாயம் சொந்தவீடு கட்டி அதில் வசிக்கக்கூடிய யோகம் கிட்டும் ஆனால் அந்த வீடு லக்னத்திற்கு 6,8,12 ஆக இருக்ககூடாது. நான்காம் வீட்டில் நல்ல ஆதிபத்தியம் கொண்ட சுக்கிரபகவான் திக்பலம் பெற்றிருப்பது ஒரு சிறந்த அமைப்பு.இந்த திசை நடப்பில் வரும்போது சுயபுத்தி முடிந்து நான்காம்வீட்டின் அதிபதியுடைய புத்தி நடைமுறைக்கு வரும்போது கட்டாயம் வீடுகட்டுதல் சம்பந்தமான காரியங்களை நடத்தும் யோகம் உண்டாகும்.



சொந்த வீடு

நான்காம் வீட்டின் அதிபதி லக்னத்திற்கு கேந்திரம்/திரிகோணம் ஏறி பலமுடன் நின்று உடன் சுபகிரக சேர்க்கை/பார்வை பெற்று திசை நடைபெற்றாலும் வீடுகட்டும் யோகம் வாய்க்கும். நான்காம் வீட்டில் ராகுபகவான் இருந்தாலும் தீய கிரகசேர்க்கையின்றி அமைந்த ராகுவிற்கு இடம் கொடுத்த கிரகம் ஆட்சி/உச்சம் அடைந்து திசை நடைபெற்றால் சொந்தவீடு கட்டும் பாக்கியம் உண்டாகும்.


மாடி மேல் மாடி வீடு

பத்தாம் வீட்டிற்குரிய கிரகமும் நான்காம் வீட்டிற்குரிய கிரகமும் இணைந்து கேந்திரத்தில் பலமுடன் நின்று திசை நடைபெற்றால் ஏராளமான வீடுகளை கட்டி விற்பனை செய்யும் யோகம் உண்டாகும். லக்னத்திற்கு பன்னிரண்டாம் வீட்டிற்கு உரிய கிரகம் இரண்டாம் வீட்டில் அமர்ந்து சுபகிரகபார்வை பெற்று திசைநடைபெறும்போது சொந்தவீடு கட்டும் யோகம் உண்டாகும்.உடன் எத்தனை கிரகம் சேர்க்கை பெற்றுள்ளதோ அத்தனை வீடுகள் அமையும்.


மனை வாங்கலாம்

நான்காம் வீட்டில் செவ்வாய் பலமுடன் நின்று சுபகிரகபார்வை பெற்று திசை நடைபெறும்போது கட்டாயம் வீடுகட்டும் அல்லது நிலம் வாங்கும் பூமிபாக்யம் உண்டாகும். லக்னத்திற்கு ஒன்பதாம் அதிபதியின் திசை ஆட்சி/உச்ச பலத்துடன் நடைபெறும்போதும் சொந்தவீடு கட்டி மகிழ்ச்சியுடன் வாழும் வாழ்க்கைஅமைப்பு உண்டாகும். மேற்கண்ட கிரகஅமைப்புகள் உங்கள் ஜாதகத்தில் இருந்தாலும் அந்த கிரகங்களின் தசாபுத்தி நடைமுறைக்கு வந்தால் மட்டுமே யோகங்கள் உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.மேற்கண்ட கிரக அமைப்புகளை தவிர சொந்தவீடு தொடர்பான மேலும் நிறைய கிரகஅமைப்புகள் ஜோதிட ரீதியாக உள்ளன.


வளம்தரும் வாஸ்து பூஜை

வீட்டு மனை வாங்கியவர்கள் என்றைக்கு பூமி பூஜை போட்டு வீடு கட்டத்தொடங்க வேண்டுமென்பதை நம் முன்னோர்கள் தெளிவாகக் கூறிச் சென்றிருக்கிறார்கள். கட்டடம் கட்டுவதற்கும் பஞ்சபூத சக்திகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. வாஸ்து வழிபாடு செய்தால், கட்டடம் கட்டும்பணி எந்தவிதத் தடையுமில்லாமல், நல்லமுறையில் கட்டடம் வளர்ச்சி பெறும்.


இன்று வாஸ்து நாள்

வாஸ்து புருஷன் வருடத்தில் நான்கு மாதங்கள் அதாவது ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களில் உறக்கத்தில் இருப்பார். சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் பூமி பூஜை செய்யலாம். சித்திரை 10 வைகாசி 21, ஆடி 11,ஆவணி 6, ஐப்பசி 11,கார்த்திகை 8, தை 12,மாசி 22 தேதிகளில் வாஸ்து பூஜை செய்ய உகந்த நாட்களாகும். இந்த நாட்களில் வாஸ்து பகவான் மூன்றே முக்கால் நாழிகை வாஸ்து பகவான் விழித்திருக்கின்றார். ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களாகும். அதாவது ஒன்றரை மணி நேரம் வாஸ்து பகவான் விழித்திருக்கின்றார்.


எப்போது பூஜை செய்வது

இந்த ஒன்றரை மணி நேரத்தில் முதல் 18 நிமிடங்கள் காலைக் கடன்களை முடித்து குளிப்பார். அடுத்த 18 நிமிடங்கள் பூஜை செய்வார். அதற்கு அடுத்த 18 நிமிடங்கள் சாப்பிடுவார். பின்னர் 18 நிமிடங்கள் வெற்றிலை பாக்குப் போடுவார். கடைசி 18 நிமிடங்கள் ஆட்சி செய்வார். உணவு அருந்த ஆரம்பித்து, தாம்பூலம் தரிக்கும் நேரம் முடிவதற்குள் மனை முகூர்த்தம் செய்வது நல்லது. இந்தத் தேதிகளில், கிழமைகள் மாறுபட்டு வந்தாலும், இந்தத் தேதிகள் மாறுவதில்லை.


வாஸ்து பகவானை வணங்குவோம்

தைமாதம் 12ஆம் தேதி ஜனவரி 25 இன்று காலை 10.40 முதல் 11.15 வரை வரும் நேரமே வாஸ்து விழிப்பு நேரம். இந்த நேரத்தில் வீடு கட்ட வாஸ்து செய்யலாம். வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டை ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் உள்ள வாஸ்து பகவான் ஆலயத்தில் ஹோமங்கள் நடைபெறுகிறது. வாஸ்து பகவானை வணங்கி வர சொந்த வீடு கட்டும் யோகம் கிடைக்கும்.

செவ்வாய், 20 மார்ச், 2018

வாஸ்து

bharathegopu.business.site

👉 மனிதனுடைய அடிப்படை தேவைகளில் பணம் அதிமுக்கியமான ஒன்று. இன்று மனிதர்கள் பணம் சம்பாதிப்பதற்காகவே வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று குடும்பத்தை பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. சிலர் சொந்த ஊர்களில் இருந்து கொண்டே கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். இன்னும் மாதம் 30 நாட்களும் பணத்திற்காக உழைக்கிறார்கள். என்னுடைய அனுபவத்தில் மனிதனுடைய வாழ்க்கை என்பது பணம் சம்பாதிக்க தான் இறைவன் படைத்தானோ என்று சில நேரங்களில் தோன்றுகிறது. அடிப்படையில் மனிதன் குடியிருக்கக்கூடிய வீடு தான் மனிதனின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது.

👉 வடக்கு, கிழக்கு நல்ல திறந்த இடைவெளியாகவும், தென்மேற்கில் படுக்கை அறை, வடகிழக்கில் hயடட, தென்கிழக்கில் சமையலறை, வடமேற்கில் கழிவறை போன்ற அமைப்புகள் இருந்தால் இயற்கையிலேயே பண கஷ்டம் நீங்கிவிடும்.

பணக் கஷ்டம் வருவதற்கான காரணங்கள் :

👉 வீட்டின் வடகிழக்கில் பூஜையறை

👉 வடகிழக்கில் மூடிய அமைப்பு இருத்தல்

👉 வடகிழக்கில் ஜன்னல் இல்லாத அமைப்பு

👉 வடகிழக்கில் மிகப்பெரிய போர்டிக்கோ அமைப்பு

👉 வடகிழக்கில் மிக உயரமான மரங்கள்

👉 வடகிழக்கில் வீட்டிற்கு வெளிப்புறத்தில் உயரமான கட்டிடம்

👉 வடகிழக்கு காம்பவுண்ட் இல்லாத அமைப்பு

👉 தென்மேற்கு தெருபார்வை

👉 தென்மேற்கு தாழ்வான போர்டிக்கோ அமைப்பு

👉 தென்மேற்கில் பூஜையறை இருத்தல்

👉 தென்மேற்கில் உள்மூளை படியமைப்பு

👉 தென்மேற்கில் உள்பகுதியில் கழிவறை

👉 தென்கிழக்கில் கிழக்கு தவறான தெருக்குத்து

👉 வடமேற்கு வடக்கு தவறான தெருக்குத்து

👉 வீட்டின் முதல் மாடியில் வடகிழக்கு உயரமான கட்டிட அமைப்பு போன்ற தவறான அமைப்புகள் பொருளாதார பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

👉 இயற்கைக்கு மாறான கட்டிட அமைப்புகளை உருவாக்கும்போது பணப்பிரச்சனை என்பது தன்னாலே வந்துவிடுகிறது.

👉 இயற்கையோடு இயற்கையாக வாழக்கூடிய, இயற்கையோடு இயற்கையாக இருக்கக்கூடிய பஞ்சபூதங்கள் நம் வீட்டிற்குள் வரும்போது மட்டுமே பணப்பிரச்சனைகள் இல்லாமல் வாழ முடியும்.

திங்கள், 19 மார்ச், 2018

கலசத்தை பூஜிப்பது ஏன்

கலசத்தை பூஜிப்பது ஏன் ?

🌟 கலசம் என்பது கும்பம். கும்பத்தில் நீர் நிரப்பி ஒரு தேங்காயை வைத்து கும்பத்தை சுற்றி நூல்களால் கட்டப்படும் புனித கும்பமே கலசம். இந்த நீருக்கு அதிக சக்தி உண்டு.

🌟 கங்கையின் புனிதம் நிறைந்த நீர் போல் இந்த கலசத்தில் இருக்கும் நீருக்கு புனிதம் அதிகமாகும். கலசத்தை பூஜிப்பதற்கு ஒரு காரணம் உண்டு. அதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

🌟 விஷ்ணுவின் நாபிக் கமலத்திலிருந்து ஒரு தாமரை வெளிப்பட்டது. அந்த மலரிலிருந்து படைப்புக் கடவுளான பிரம்மா தோன்றினார். பிரம்மாவே உலகத்தை சிருஷ்டித்தார்.

🌟 கலசத்தில் உள்ள புனித நீரானது அனைத்திற்கும் உயிர் அளிக்கும் சக்தி படைத்தது. இந்த நீர் எண்ணிலடங்கா உருவங்களையும், வடிவங்களையும் உயிர்த் துடிப்பும், உணர்வும் உள்ள பொருள்கள் மற்றும் ஜடப் பொருள்கள் ஆகிய அனைத்தையும் படைக்கும் சக்தியை தன்னுள் அடக்கியுள்ளது.

🌟 கலசத்தில் உள்ள இலைகளும், தேங்காயும் சிருஷ்டியைக் குறிக்கின்றன. கலசத்தைச் சுற்றியுள்ள நு}ல் படைப்பில் உள்ள அனைத்தையும் ஒன்றாகப் பிணைக்கும் அன்பைக் குறிக்கிறது. ஆகவேதான் கலசம் புனிதமாகக் கருதப்பட்டு பூஜிக்கப்படுகிறது.

🌟 புனிதமான நதிகளின் நீர், அனைத்து வேதங்களின் சாரம் மற்றும் அனைத்து தேவதைகளின் ஆசி ஆகியவை கலசத்தில் உள்ள நீரில் வந்து சேரவேண்டுமென்று பிரார்த்திக்கப்படுகிறது. பின்னர், கலச நீர் அபிஷேகத்திற்கும் மற்ற சடங்குகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

🌟 கோவில் கும்பாபிஷேகத்தில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலசத்தில் உள்ள புனித நீர் ஆலய கோபுரக் கலசங்களின் மேல் ஊற்றப்படுகிறது.

🌟 அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடந்தபோது, அமுத கலசத்தை ஏந்தியவாறு இறைவன் தோன்றினார். இவ்வமுதம் அனைவருக்கும் இறவாவரத்தை அருளியது.
இந்த அற்புத நீர் நம்மீது படும்போது நமது ஆயுள் நீடிக்கும் ஆரோக்கியம் கூடும் என்பது ஐதீகம்.

 நாம்  செய்யும் அனைத்து நல்ல காரியங்கள்,விசேஷங்கள் சிறப்புற நடைபெற கலசம் வைத்து அதில் நாம் வணங்கும் தெய்வத்தை ஆவாகரணம் செய்து வழிபடுவது இந்துக்கள் செய்யக்கூடிய ஒன்றாகும்.

கலசம் என்பது என்ன?

மண் அல்லது செம்பு,பித்தளை,தாமிரம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட நீர் நிறைந்த ஒரு பாத்திரம்-செம்பு-சிறு பானைதான்  கலசம் எனப்படுகிறது.

இந்த கலசத்தில்  மாவிலைகள் செருகப்பட்டு நடுவில்  ஒரு தேங்காய் வைக்கப்படும்.வெண்மை அல்லது சிவப்பு நிறமுள்ள நூல்கள் பானையின் கழுத்திலிருந்து முழுமையாக டயமண்ட் வடிவத்தை உருவாக்கும் வகையில் நுணுக்கமாக கட்டப்படுகிறது .பானையின் மேல் அழகான லக்ஷ்மி தேவியின் உருவத்தை வரைவது உண்டு.இந்த பானை கலசம் என்றழைக்கப்படுகிறது.

பூரண கும்பம்

கலத்தில் நீரோ அல்லது அரிசியோ நிரப்பப்படும்.இதற்கு பூரண கும்பம் என்றழைக்கப்படுகிறது.

கிரக பிரவேசம்,திருமணம்,விரத நாட்களில் கலசம் வைத்து வழிபடுவார்கள்.மேலும் விழா நடத்தப்படும் இடத்தின் நுழைவாயிலில் ,வருவோரை வரவேற்க்கும் வகையில் இக்கலசம்  வைக்கப்படுகிறது.

பெரியோர்களை முக்கிய பிரமுகர்களை பூரண கும்பம் கொடுத்து வரவேற்பர்.

கலசம் வைத்து பூஜிப்பது ஏன்?

உலகை படைக்கும் முன் விஷ்ணு,பாற்கடலில் பாம்பணையின் மேல் சாய்ந்து அமர்ந்திருந்தார்.அவருடைய நாபிக் கமலத்திலிருந்து ஒரு தாமரை வெளிப்பட்டது.அந்த மலரிலிருந்து படைக்கும் கடவுளான பிரம்மதேவன் தோன்றினார்.பிரம்மாவே உலகத்தை சிருஷ்டித்தார்.

கலசத்தில் உள்ள நீரானது ,எந்த நீரிலிருந்து படைப்பில் உள்ள அனைத்தும் தோன்றியதோ,அந்த நீரைக் குறிக்கும்.அந்த புனித நீர்தான் அனைத்திற்கும்  உயிர் அளிக்கும் சக்தி படைத்தது.இந்த நீர் எண்ணிலடங்கா உருவில்,வடிவில்,உயிர்த்துடிப்பும் உணர்வும் உள்ள பொருள்கள் மற்றும் ஜடப் பொருள்கள் ஆகிய அனைத்தையும் படைக்கும் சக்தியைத் தன்னுள் அடக்கியுள்ளது.

மேலும் உலகிலுள்ள மங்களமான அனைத்தையும் படைக்கும் சக்தி பெற்றது.கலசத்தில் வைக்கப்படும் மாவிலைகளும்,தேங்காயும் சிருஷ்டியைக் குறிக்கும்.கலசத்தில் சுற்றிய நூல் படைப்பில் உள்ள அனைத்தையும் ஒன்றாக பிணைக்கும் அன்பைக் குறிக்கிறது.ஆகவேதான் கலசம் புனிதமாக கருதி பூஜிக்கப்படுகிறது.

புனிதமான நதிகளின் நீர் அனைத்தும் வேதங்களின் சாரம் மற்றும் அனைத்து தேவதைகளின் ஆசி கலசத்தில் உள்ள நீரில் வந்து சேர வேண்டுமென்று பிரார்த்திக்க வேண்டும்.பின்னர் பூஜைகள் முடிந்தவுடன்,நம் வீட்டில் உள்ள எல்லா இடங்களிலும்  புனித  நீராக தெளிக்கப்படுகிறது.

ஆலய கும்பாபிஷேகங்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலசத்தில் உள்ள புனித நீரை ஆலய கோபுர கலசங்களின் மேல் ஊற்றப்படுகிறது .

 நிறைகுடம்என்பது தமிழர் கலாசார அடையாளங்களில் ஒன்றாகும். தமிழரின் மங்கலப் பொருட்களுள் ஒன்றாக இது அமைகின்றது. நிறைவான குடம் எனும் பாெருளில் நிறைகுடம் எனப்படுகின்றது. முழுமையாக நீர் நிறைந்த கலசத்தில் மாவிலைகளைச் சொருகி அதன்மேல் முடி நன்கு சீவப்பட்ட தேங்காய் வைக்கப்படும். இதனோடு குத்துவிளக்கு, ஊதுபத்தி, திருநீறு, சந்தனம், குங்குமம் முதலிய மங்கலப் பொருட்களும் வைக்கப்பட்டு இவை யாவும் அரிசி அல்லது நெல் பரவிய வாழை இலையின் மேல் வைக்கப்படும்.

சைவத் தமிழ் மக்கள்; தங்கள் கலை, கலாச்சார, சமூக நிகழ்வுகளின் போதும், விசேஷ பண்டிகை கொண்டாட்டங்களின் போதும், சுபமங்கள சடங்குகள் நடைபெறும் போதும் நிறை குடம் வைத்து வரவேற்பதும், ஆராத்தி செய்வதும் ஆகம மரபு வழி வந்த வழக்கமாகும்.

சுப நாட்களில் வீட்டு வாசலில் நிறை குடம் வைப்பதன் மூலம் சகல செல்வங்களும் வீட்டில் நிரம்பப்பெற்று இருக்கும் எனவும் இதை மங்களத்தின் அறிகுறியாக இந்துக்கள் போற்றுகின்றார்கள். அத்துடன் நிறைகுடம் வைக்கும் இடத்தில் இலக்குமி வாசம் செய்வாள் (வருகை தருவாள்) என்பதும் இந்துக்களின் நம்பிக்கை.

நிறைகுடம் வைக்கத் தேவையான பொருட்கள்

1.  நிறை குடம் (நீர் நிறைத்த குடம்)
2.  சாணம் அல்லது மஞ்சளினால் செய்த பிள்ளையார் அல்லது பிள்ளையார் சிலை.
3.  நெல் அல்லது பச்சரிசி
4.  தலை வாழையிலை
5.  முடித் தேங்காய் - 1
6.  மாவிலை 5 அல்லது 7
7.  குத்து விளக்கு 2
8.  தேங்காய் எண்ணெய்
9.  விளக்குத் திரி
10.  விபூதி + கிண்ணம்
11.  சந்தணம் + கிண்ணம்
12.  குங்குமம் + கிண்ணம்
13.  பன்னீர் + செம்பு
14.  பலநிறப் பூக்கள்
15.  வாழைப்பழம் - ஒரு சீப்பு
16.  தேங்காகாய் – 1 உடைப்பதற்கு
17.  வெற்றிலை 3
18. பாக்கு 3
19. சாம்பிராணி

நிறைகுடம் வைத்தல்
ஒரு மேசையைச் சுத்தம் செய்து, அதன்மீது சுத்தமான விரிப்பொன்றை விரிக்கவும். அதன்பின் அதன்மீது ஒரு தலைவாழை இலையை இலையின் நுனிப்பகுதி வடக்கு முகமாகவோ அல்லது கிழக்கு முகமாகவோ அமையுமாறு வைக்கவும். இம் முறை அவ்விடத்திற்கு பொருந்தாவிட்டால், பொதுவாக வரவேற்பு நிகழ்வாக இருந்தால் வருபவர்களுக்கு வலப்பக்கத்தில் இலையின் அகன்ற பகுதி இருக்கக் கூடியதாக வாழைஇலையை வைக்கவும்.

அதன் மேல் நெல் அல்லது அரிசி பரப்பி அதன்மேல் நீர் நிரப்பிய பித்தளை அல்லது சில்வரினால் ஆன கும்ப குடத்தை வைக்கவும். அதன் இரு பக்கங்களிலும் குத்துவிளக்கு ஒவ்வொன்று வைக்கவும். அதன் பின் ஐந்து மாவிலைகளை குடத்தின் வாயில் வைத்து சுத்தம் செய்து வைத்த முடித்தேங்காயை அதன் மேல் வைக்கவும், அமங்கல கிரியைகளுக்கு கும்பம் வைக்கும் போது மாத்திரம் மூன்று மாவிலைகள் வைப்பார்கள்.

ஒரு தட்டத்தில்(தட்டில்) வாழைப்பழச்சீப்பு ஒன்றும், வெற்றிலைபாக்கு (வெற்றிலை ஒற்றைவிழும் எண்ணில்), தேசிக்காய் ஒன்றும்(வைக்கலாம் அல்லது தவிர்க்கலாம்) கும்பத்தின் இடது பக்கத்தில் வைத்து அதனுள் மஞ்சளினால் செய்த பிள்ளையார் அல்லது சிறிய பிள்ளையார் சிலையையும் வைக்கவும்.

இன்னொரு தட்டத்தில் அல்லது தட்டில் சந்தனம், குங்குமம், பன்னீர்ச்செம்பு, விபூதி வைத்து வலப்பக்கத்தில் வைக்கவும். நிறைகுடத்திற்கு ஒரு மாலையும் போடலாம். அல்லது பூக்களினால் அலங்கரிக்கலாம். குத்து விளக்குகளிற்கும் பூக்கள் வைக்கலாம்.

நிகழ்வு ஆரம்பமாவதற்கு முதல் இரண்டு குத்து விளக்குகளிலும் திரிகளில் ஒவ்வொன்றையோ அல்லது ஐந்தையுமோ கொழுத்தி விடவும். ஒரு தேங்காயை உடைத்து கும்பத்தின் இரு பக்கங்களிலும் வைக்கவும். அத்துடன் தூபம் ஏற்றுதல் வேண்டும். ஒன்று அல்லது மூன்று சாம்பிறாணிக் குச்சிகளைக் கொழுத்தி வாழைப் பழத்தில் குத்தி விடலாம்.

ஆராத்தி எடுத்தல்:

மங்கள காரியங்களிற்கு ஆராத்தி எடுக்கும் போது சுமங்கலிப் பெண்கள் இருவர் கும்பத்திற்கு முன்னால் நின்று ஆராத்திக்குரியவரை கும்பத்தை பார்த்துக் கொண்டு நிற்கச் செய்து ஆராத்திக்கு உரியவரின் கீழ்ப் பக்கத்தில் ஆராத்தித் தட்டை வலது, இடது பக்கமாக மூன்று முறை ஆட்டி அதன்பின் ஆராத்திக் குரியவரின் வலது பக்கமாக மேலே உயர்த்தி இடது பக்கத்தால் கீழே இறக்கி மீண்டும் கீழே மூன்று முறை ஆட்டி திரும்பவும் இவ்வாறு மூன்று முறை செய்யவும்.

மூன்றாவது சுற்று இறுதியில் ஆராத்தித் தட்டை நடுவே கொண்டு வந்து திரி ஆராத்தியாயின் அவற்றை தட்டில்லுள்ள மஞ்சள்-குஞ்கும கலவையில் அமிழ்த்தி நூர்த்தபின் திரிக் கரியுடன் சேர்ந்த மஞ்சளை-குங்குமத்தை ஆராத்திக் குரியவரின் நெற்றியில் திலகமாக இட்டு திஷ்டி கழிக்க வேண்டும். இதனை ஆராத்தி எடுத்த சுமங்கலிப் பெண்கள் இருவரும் செய்தல் வேண்டும்.

அமங்கல கிரியைகளுக்கு மாத்திரம் உரியவருக்கு இடது பக்கமாக உயர்த்தி ஆராத்தி செய்வார்கள்.

மாவிலை கட்டுதல்:

மங்கள் வைபவங்களுக்கு பந்தலில் மாவிலை கட்டும்போது மாவிலையின் முன்பக்கத்திற்கு நூலை/கயிற்றை வைத்து முன்பக்கமாக மாவிலையை மடித்தல் வேண்டும்.

அமங்கல கிரியைகளின் போது மாத்திரம் மாவிலை பின்பக்கமாக மடிக்கப்படுகின்றது.

பூரண கும்பம்
உலகமும் அதிலுள்ள தாவர சங்கமப் பொருள்களும் சகல ஆத்மாக்களும் நீரிலிருந்தே உண்டாகின்றன. மறுபடியும் பிரளய காலத்தில் தண்ணீரிலேயே லயமாகி விடுவதாக வேதம் கூறுகின்றது. ஆகையால் ஆதிகர்த்தாவாகிய இறைவன் நீரின்மூலம் உருவ வழிபாட்டுக்குக் கொண்டுவருவதே பூரண கும்பத்தின் அர்த்தம்.

இப் பூரண கும்பத்தை மனித உடலாக பாவித்து அதில் இறைவனை தியான, ஜப, பிரார்தனையின்மூலம் யாக சாலையில் வைத்து யாகமும் பூஜைகளும் செய்யப்படுகின்றன. சக்தி வாய்ந்த ஸ்ரீ ஜாக்ஷரங்கள் கொண்ட மந்திரங்களில் கும்பநீர் சுத்தி செய்யப்பட்டு அதில் தெய்வ ஆவாகனம் செய்யப்படுகின்றது. இந்த நீர் கெடாதிருக்க, கராம்பு, ஜாதிக்காய், பச்சைக் கற்பூரம் , குங்குமப்பூ முதலிய திரையங்கள் சேர்க்கப்பட்டுகின்றன. அஷ்டலக்ஷ்மிகளின் கடாட்ஷம் நிறைந்திருக்க மாவிலைவைக்கப்படுகின்றது. தேங்காய், மஞ்சள், குங்குமம், பூ, தர்ப்பை, கூச்சம், ஸ்வர்ணம், அக்ஷதை ஆகிய எட்டு மங்களப் பொருள்களால் கும்பம் அலங்கரிக்கப்படுகின்றது.

கும்ப தத்துவம்
மங்கள காரியங்களுக்காக வைக்கப்படும் நிறைகுடத்தில் 5 மாவிலைகள் இடம் பெறுகின்றன. இவ் ஐந்து மாவிலைகளும் ஐம்புலன்களையும் நினைவு படுத்துவதாக அமைகின்றன. குடமும் நீரும் நமது உடலை நினைவு படுத்துவதாகும். நிறைகுடமாகிய பூரண கும்பத்தை ஒரு முழுமதியாக ஒப்பிட்டார் கம்பர். எப்படியிருப்பினும் மனித உடல் ஐம்புலன், சிரசு,  இவறை அடக்கும் கருவியாக பூரணகும்பம் இடம்பெறுகின்றது. பூரண கும்பம் இல்லாத சடங்குகளே இல்லை என்றே  கூறலாம்.சைவத் தமிழ் மக்கள்; தங்கள் கலை, கலாச்சார, சமூக நிகழ்வுகளின் போதும், விசேஷ பண்டிகை கொண்டாட்டங்களின் போதும், சுபமங்கள சடங்குகள் நடைபெறும் போதும் நிறை குடம் வைத்து வரவேற்பதும், ஆராத்தி செய்வதும் ஆகம மரபு வழி வந்த வழக்கமாகும்.தற்போது கிறித்தவர்களும் தமது வழிபாட்டுத் தலங்களின் திருவிழாக் காலங்களில் நிறைகுடம் வைப்பதைக் காணலாம்.

 கலசம் என்பது என்ன? மண் அல்லது செம்பு, பித்தளை, தாமிரம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட நீர் நிறைந்த ஒரு பாத்திரம் - செம்பு - சிறுபானைதான் கலசம் எனப்படுகிறது. இந்தக் கலசத்தில் மாவிலைகள் செருகப்பட்டு, அவற்றின் நடுவில் ஒரு தேங்காய் வைக்கப்படும். வெண்மை அல்லது சிவப்பு நிறமுள்ள நூல்கள் பானையின் கழுத்திலிருந்து முழுமையாக டயமண்ட் வடிவத்தை உரு வாக்கும் வகையில் நுணுக்கமாகக் கட்டப்படுகிறது. பானையின் மேல் அழகான வடிவங்கள் வரையப்படுவதும் உண்டு.

இந்தப் பானை கலசம் என்றழைக்கப்படுகிறது. இது நீரினாலோ அல்லது அரிசியினாலோ நிரப்பப்படும். இது பூர்ண கும்பம் என்றழைக்கப்படுகிறது. இது போன்றே ஜடப்பொருளான நமது உடல் தெய்வீகமான சக்தியால் உயிர்பெறும் பொழுது அற்புதமான, போற்றத்தக்க செயல்களை செய்யக்கூடியதாக மாறுகிறது. மரபுப்படி நடத்தப் பெறும் கிருகப் பிரவேசம், திருமணம், தினசரி பூஜைகள் போன்ற சமயங்களில் இத்தகைய கலசம் வைக்கப்படுகிறது. மேலும், விழா நடத்தப்படும் இடத்தின் நுழைவாயிலில், வருவோரை வரவேற்கும் வகையில் இக்கலசத்தை வைக்கிறார்கள். பெரியோர்களையும் முக்கியப் பிரமுகர்களையும் பூரண கும்பம் கொடுத்து வரவேற்பது மரபு. பூஜிப்பது ஏன்? உலகைப் படைக்கும் முன் பகவான் விஷ்ணு, பாற்கடலில் பாம்பணையின் மேல் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தார்.

அவருடைய நாபிக் கமலத்திலிருந்து ஒரு தாமரை வெளிப்பட்டது. அந்த மலரிலிருந்து படைப்புக் கடவுளான பிரம்மா தோன்றினார். பிரம்மாவே உலகத்தை சிருஷ்டித்தார். கலசத்தில் உள்ள நீரானது, எந்த நீரிலிருந்து படைப்பில் உள்ள அனைத்தும் தோன்றியதோ, அந்த நீரைக் குறிக்கிறது. அந்தப் புனித நீர்தான் அனைத்திற்கும் உயிர் அளிக்கும் சக்தி படைத்தது. இந்த நீர் எண்ணிலடங்கா உருவங்களையும் வடிவங்களையும் உயிர்த் துடிப்பும் உணர்வும் உள்ள பொருள்கள் மற்றும் ஜடப் பொருள்கள் ஆகிய அனைத்தையும் படைக்கும் சக்தியைத் தன்னுள் அடக்கியுள்ளது. மேலும், உலகில் உள்ள மங்களகரமான அனைத்தையும் படைக்கும் சக்தியையும் பெற்றது, இது.

கலசத்தில் உள்ள இலைகளும் தேங்காயும் சிருஷ்டியைக் குறிக்கின்றன. கலசத்தைச் சுற்றியுள்ள நூல் படைப்பில் உள்ள அனைத்தையும் ஒன்றாகப் பிணைக்கும் அன்பைக் குறிக்கிறது. ஆகவேதான் கலசம் புனிதமாகக் கருதப்பட்டு பூஜிக்கப்படுகிறது. புனிதமான நதிகளின் நீர், அனைத்து வேதங்களின் சாரம் மற்றும் அனைத்து தேவதைகளின் ஆசி ஆகியவை கலசத்தில் உள்ள நீரில் வந்து சேரவேண்டுமென்று பிரார்த்திக்கப்படுகிறது. பின்னர், கலச நீர் அபிஷேகத்திற்கும் மற்ற சடங்குகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

 ஆலய கும்பாபிஷேகத்தில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலசத்தில் உள்ள புனித நீர் ஆலய கோபுரக் கலசங்களின் மேல் ஊற்றப்படுகிறது. அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, அமுத கலசத்தை ஏந்தியவாறு இறைவன் தோன்றினார். இவ்வமுதம் அனைவருக்கும் இறவாவரத்தை அருளியது. எனவே, கலசமும் இறவாத் தன்மையைக் குறிக்கிறது. ஞானியர் என்போர் நிறை மனிதர்கள். இதற்குக் காரணம் அவர்கள் தங்களுடைய உண்மை சொரூபம், பூர்ணமான -எங்கும் நிறைந்த - பேருண்மையேயன்றி வேறில்லை என்பதை நன்கு உணர்ந்தவர்கள். அவர்கள் என்றும் குறைவற்ற மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்து விளங்குகின்றனர். உலகில் உள்ள மங்களகரமான அனைத்தையும் குறிப்பவர்களாக அவர்கள் விளங்குகின்றனர். அந்த நிறை மனிதர்களின் பெருமையைப் போற்றும் வகையில் பூர்ணகும்பத்துடன் அவர்கள் வரவேற்கப்பட்டனர். இது அவர்களிடத்து நமக்கு உள்ள பக்தி நிறைந்த மரியாதையை நாம் முழுமனதுடன் வெளிப்படுத்துவதன் அடையாளமாகும்.

திதி பஞ்சாங்கம்

திதி - பஞ்சாங்கம்

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்திருப்பார்கள். அதன் பின் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகி செல்வார். திதி எனப்படுவது பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.
இந்துக்களின் தமிழ் நாட்காட்டியின்படி ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை மற்றும் சுக்கில பட்சம் அல்லது வளர்பிறை ஆகும்.
திதி   -    தெய்வம் மற்றும் செய்ய வேண்டியவை!
பிரதமை -  முதல் சந்திர நாள் முக்கிய தெய்வம் அக்னி ஆகும். பூஜைகள் மற்றும் மங்கள காரியங்கள் செய்ய உகந்த நாள்.

துவிதியை - இது ப்ரம்மாவுக்கு உரிய நாள் இன்று கட்டிடம் கட்டுவதர்கான அஸ்திவாரம் அமைத்தல் மற்றும் நிலைத்தன்மை கொண்டவை உருவாக்குதல் நன்மைதரும்.

திருதியை - கெளரிமாதாவுக்கு உகந்த நாள். சிகை திருத்தம் செய்தல், முகசவரம், நகம் வெட்டுதல் முதலியன நன்மை தரும்.

சதுர்த்தி  -  நான்காம் நாள் எமன் மற்றும் வினாயகருக்குரிய நாள். எதிரிகளை வீழ்த்துதல், தடை தகர்தல் முதலிய போர் காரியங்கள் வெற்றி தரும்.

பஞ்சமி - இது நாகதேவனின் நாள், விஷம் முறித்தல், மருத்துவம் செய்தல் அறுவை சிகிச்சை முதலியன பலன் தரும்.

சஷ்டி - நாளின் தெய்வம் முருகன். புதிய நண்பர்களை சந்தித்தல், கொண்டாட்டம் கேளிக்கை முதலியன சிறப்பு.

சப்தமி சூரியனின் நாள். பிரயாணம் தொடங்குதல், பிரயாண படி கேட்டல், முதலிய நகர்தல் சம்மந்தமான காரியங்கள் கைகூடும்.

அஷ்டமி - இன்னாளின் கடவுள் மஹாருத்ரன் ஆவார். ஆயுதம் எடுத்தல், அரன் அமைத்தல், போர் மற்றும் தற்காப்பு கலை கற்றல் ஆகியவை உகந்தது.

நவமி - அம்பிகையின் நாள். எதிரிகளை கொல்லுதல், வினாசம் செய்தல்.

தசமி - தர்மராஜாவின் நாள். மதவிழாக்கள், ஆன்மீக செயல்கள் நன்மை தரும்.

ஏகாதசி - மஹாருத்ரனின் நாள். இன்னாளில் விரதம் மேற்கொள்ளுதல் மற்றும் பரமாத்வாவை தியனிதல் சிறப்பு.

துவாதசி - மஹாவிஷ்ணுவின் ஆதிக்கமுடய நாள். விளக்கு ஏற்றுதல், மதவிழாக்கள், பணிகள் செய்தல்.

திரயோதசி மன்மதனின் நாள். அன்பு செலுத்துதல், நட்பு வளர்தல்.

சதுர்த்தசி - காளியின் ஆதிக்கமுடய நாள். விஷத்தை கைய்யாளுதல், தேவதைகளை அழைத்தல்.

அமாவாசை - அமாவாசை பித்ருகளுக்கு காரியங்கள் செய்யவும்.

பௌர்ணமி - பௌர்ணமி அன்று அக்னிக்கு ஆஹுதி கொடுத்தல் முதலியன நலம் தரும்.

ஞாயிறு, 18 மார்ச், 2018

தேனீ கூடு கட்டுவதற்கும் வாஸ்துவுக்கும் என்ன தொடர்பு?


bharathegopu.business.site

தேனீ கூடு கட்டுவதற்கும் வாஸ்துவுக்கும் என்ன தொடர்பு?



 இயற்கையிலேயே இந்த பிரபஞ்சம் பல அதிசயங்களை கொண்டுள்ளது. அதேபோல் இயற்கையை புரிந்து வாழ்பவர்களுக்கு என்றுமே கஷ்டங்கள் வருவதில்லை. அவர்கள் என்றுமே பிரச்சனையில் சிக்கி கொள்வதில்லை. அந்த வகையில் தேனீ கூடு கட்டுவதற்கும் மனித வாழ்க்கைக்கும் நெருங்கிய சில தொடர்புகள் உண்டு.

தேனீக்கள் கூடு கட்டக்கூடிய இடங்கள் :

1. மிகப்பெரிய வியாபாரஸ்தலங்கள்

2. அப்பார்ட்மெண்ட்

3. உபயோகமில்லாத கட்டிடங்கள்

4. மலை முகடுகள்

5. உயரமான மரங்கள்

6. சூரிய ஒளிகீற்று படாத இடங்கள்

7. ஆட்கள் நடமாட்டம், தொந்தரவு இல்லாத இடங்கள்

8. மிக சுத்தமான இடங்கள்

இங்கெல்லாம் தேனீக்கள் கூடுகட்டும்போது ஏற்படக்கூடிய அல்லது வரக்கூடிய பிரச்சனைகள்தான் என்ன?

1. ஆண்களின் ஆதிக்கம் வீழ்ச்சியடைகிறது.

2. பொருளாதார சரிவு ஏற்படுகிறது.

3. அந்த இடம் கடன் சுமைக்கு தள்ளப்படுகிறது.

4. பெண் சொத்தாக மாற வாய்ப்புள்ளது.

5. ஆண்கள் நோயால் பாதிக்கப்படக்கூடும்.

6. கண்பார்வையில் குறைபாடு ஏற்பட வாய்ப்புண்டு.

7. தோல் சம்மந்தமான வியாதி வர வாய்ப்புண்டு.

8. பெண் நிர்வாகமாக மாறி போகுதல்.

9. நிர்வாக சீர்குலைவு ஏற்படுதல்.

நம் குடியிருப்பு பகுதியில் பறவைகள் கூடுகட்டும்போது இதுபோல பல பாதிப்புகள் வரக்கூடும். சிறிய பறவையான சிட்டுக்குருவி முதல் மிகப்பெரிய பறவையான கழுகு வரையில் எது கூடு கட்டினாலும் பாதிப்பு என்பது உறுதி. பெரும்பாலும் பறவைகள் கூடுகட்டும் இடம் சுத்தமில்லாத இடமாக இருக்கும்.

பாதிப்புகள் :

1. ஆண்களுக்கு ர்நயசவ சம்பந்தமான பிரச்சனைகள்வர வாய்ப்புண்டு

2. குழந்தை பிறப்பு தள்ளிபோகுதல்

3. வறுமை, கடன்சுமை ஏற்படுதல்

4. மனநலம் தொடர்பான பிரச்சனைகள்

5. கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடு

6. சொத்து ஏலம் போகும் அளவிற்கு கடன்சுமை

7. கலகம் ஏற்படுதல்

இதுபோல இயற்கையில் பல அறிகுறிகள் இருந்தாலும் காலப்போக்கில் யாரும் நமக்கு எடுத்து கூறாத பட்சத்தில் எது சரி, எது தவறு என்பதை உணர்வதற்குள் அனைத்து பிரச்சனைகளும் நடந்து முடிந்து விடுகிறது.

கோவிலில் வழிபடும் முறைகள்



கோவிலில் நாம் செய்யும் தவறுகள் -  திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு !!
கோவிலில் வழிபடும் முறைகள் !!
✴ குளித்து, சுத்தமாக கோவிலுக்கு செல்ல வேண்டும். கோவிலிற்கு வெறுங்கையுடன் செல்லாமல் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு மற்றும் பூ ஆகியவற்றை வாங்கி செல்ல வேண்டும்.

✴ சிவன் கோவிலென்றால் வில்வத்தாலும், பெருமாள் கோவிலென்றால் துளசியாலும் அர்ச்சனை செய்ய வேண்டும். கோபுரத்தை வணங்கிவிட்டே உள்ளே செல்ல வேண்டும்.

✴ நமஸ்காரம் செய்யும் போது மேற்கு அல்லது தெற்கில் கால் நீட்டல் வேண்டும். வடக்கிலும், கிழக்கிலும் கால் நீட்டுதல் கூடாது.

✴ விநாயகர் சன்னதியில் தலையில் மூன்று முறை கொட்டிக் கொண்டு, 3 தோப்புக் கரணம் போட வேண்டும்.

✴ விநாயகரை ஒரு தரமும், சூரியனை 2 தரமும், அம்பாளையும், விஷ்ணுவையும் 4 தரமும், ஆஞ்சநேயரை 5 முறையும் பிரதட்சணம் செய்ய வேண்டும்.

✴ மூலவருக்கு அபிஷேகம் நடந்தால், பிரகாரத்தை சுற்றக்கூடாது. அபிஷேகத்தை கண்டால் அலங்காரமும் பார்க்க வேண்டும்.

✴ நமது வேண்டுதல்களையெல்லாம் கொடிமரத்தின் அருகே நின்று கேட்க வேண்டும். அதற்கு பிறகு வேறெந்த சன்னதியிலும் சிவன் நாமம், நாராயண நாமம் தவிர வேறெந்த சிந்தனையும் இருக்கக்கூடாது. கோவிலுக்குள் ஒருவருடனும் பேசக்கூடாது.

✴ ஆலயத்திற்குள் ஒருவரை ஒருவர் கும்பிடக்கூடாது. ஏனெனில், கும்பிட்டவரின் பாவம் எதிரில் உள்ளவரை சேரும். சனிபகவானை நேருக்கு நேர் நின்று கும்பிடக்கூடாது.

✴ ஆலய வளாகத்திற்குள் அசுத்தம் செய்தல், குப்பையைப் போடுதல் போன்றவற்றை செய்தல் கூடாது.

✴ கோவிலிலிருந்து பிரசாதம் தவிர வேறெதையும் எடுத்துச் செல்லக்கூடாது.

✴ சண்டிகேசுவரரின் சன்னதியில் நூலை கிழித்துக் போடக் கூடாது. சிவ தியானம் பூர்த்தி செய்யச் சொல்லி அவரிடம் வேண்டிவிட்டு, சிவனுடைய அருளைத் தவிர, வேறெதையும் கொண்டு செல்லவில்லை என்று சண்டிகேசுவரரிடம் தெரிவித்துவிட்டு செல்ல வேண்டும்.

✴ சிவன் கோவிலில் காலபைரவரையும், பெருமாள் கோவிலில், சக்கரத்தாழ்வாரையும் வழிபட்டால் செய்வினை தோஷங்கள் அணுகாது.

✴ கோவிலுக்கு சென்று விட்டு நேரே வீட்டிற்கு செல்ல வேண்டும். இப்படியெல்லாம் அனுஷ்டித்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
bharathegopu.business.site

சனி, 17 மார்ச், 2018

வடக்கு பார்த்த கட்டடத்திற்கு வடக்கு திசையில் மேற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்ககூடாது.

கிழக்கு பார்த்த கட்டிடத்திற்கு கிழக்கு திசையில் தெற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்ககூடாது.

மேற்கு பார்த்த கட்டிடத்திற்கு மேற்கு திசையில் தெற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்ககூடாது.

தெற்கு பார்த்த கட்டிடத்திற்கு தெற்கு திசையில் மேற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்ககூடாது.

ஒரு கட்டடத்தின் தலைவாசல் என்றும் நீச்ச‌த்தில் அமைக்ககூடாது. அவ்வாறு நீச்சதில் அமைக்கும் போது நம் வாழ்வில் பல இன்னல்கள் நேரும்.


ஒரு கட்டடத்தி‌ல் தலைவாசல் அமைக்கக்கூடாத இடங்கள்:


மேலும் தலைவாசல் மூன்று, ஐந்து, ஏழு... என்ற எண்ணிக்கையில் வருமாறு அமைப்பது சிறந்ததல்ல

எட்டு காலங்கள் :

எட்டு காலங்கள் :

தெரிந்து கொள்வோம்🙏🙏

விடியலுக்கு முன் 3 மணி முதல் 6 மணி வரை - பிரம்ம முகூர்த்தம்.

அதிகாலை 6 மணி முதல் 7 மணி வரை - தேவர்கள் காலம்.

முற்பகல் 9 மணி முதல் 12 மணி வரை - ரிஷிகளின் காலம்.

நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை - பிதுர்க்களின் காலம்.

பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை - சந்தியா காலம்.

முன் இரவு 6 மணி முதல் 9 வரை -
பூத காலம்.

நடு இரவு 9 மணி முதல் 12 மணி வரை- பிரேத காலம்.

பின் இரவு 12 மணி முதல் 3 மணி வரை - ராக்ஷச காலம்

பிரம்ம முகூர்த்த காலத்தில்
திதி, நக்ஷத்ரம் சரியில்லாவிட்டாலும் சுபகாரியங்கள் செய்யலாம்.

உதய காலம் தேவர்களுடையதால்
வேளையும், நக்ஷத்ரமும் உகந்ததாய் இருக்க வேண்டும்.

ரிஷிகளின் காலத்தில்
நற்காரியங்கள் செய்ய நல்ல ஓரை, திதி, நக்ஷத்ரம், வேளை அடுத்தபடியாகவும், தேர்ந்து செய்ய வேண்டும்.

பிதுர்க்களின் காலத்தில்
திதியினை பிரதானமாகவும், நக்ஷத்ரத்தை அடுத்தபடியாகவும் தேர்வு செய்ய வேண்டும்.

சந்தியா காலத்தில் மனித விருப்பங்கள்,
கேளிக்கைகள் போன்ற எக்காரியமும் செய்யாது, இறை வழிபாட்டிற்கும், ஜெபம், தவம், போன்றவற்றை மட்டுமே செய்ய வேண்டும்.

நடுப்பகல் சரியாக 12 மணி அல்லது, நடு இரவு சரியாக 12 மணியில் எந்தக் காரியத்தையும் துவங்கவோ, முடிக்கவோ கூடாது.
*    🙏 *வாழ்க வளமுடன்* 🙏

bharathegopu.business.site

வெள்ளி, 16 மார்ச், 2018

அமாவாசை வழிபாட்டின் மகத்துவம்!



இன்று அமாவாசை: முன்னோர்களின் ஆசியைப் பெறுவோம்.!
அமாவாசை வழிபாட்டின் மகத்துவம்!

bharathegopu.business.site

👉 நம் ஊரில் உள்ள கோவில்களில் அமாவாசை அன்று சிறப்பாக பூஜை செய்யக் காரணம், அன்று தெய்வங்கள் மற்ற நாட்களில் சக்தியுடன் இருப்பதை காட்டிலும் அதிக சக்தியுடன் அமானுஷ்ய விஷயங்களிருந்து ஊரை காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அன்று சிறப்பாக பூஜை செய்யப்படுகிறது.

அமாவாசை அன்று வழிபடக்கூடிய தெய்வங்கள் :

👉 விநாயகர், குலதெய்வம், காளி, பிரத்யங்கரா தேவி, ஸ்ரீவாராஹி அம்மன், நரசிம்மர், ஆஞ்சநேயர், ஆற்றங்கரையில் வீற்றிருக்கின்ற சிவன் ஆலயங்கள் மற்றும் மாசாணியம்மன், அங்காள பரமேஸ்வரி.

👉 அமாவாசையன்று சர்வகோடி லோகங்களிலுள்ள மகரிஷிகள் உள்பட அனைத்து தேவதைகளும், ஜீவன்களும், காலச்சென்ற நம்முடைய முன்னோர்களும் பூலோகத்திற்கு வந்து புண்ணிய நதிக்கரைகளிலும், கடலோரங்களிலும் காசி, ராமேஸ்வரம், கயை போன்ற புண்ணிய தலங்களிலும் தர்ப்பண பூஜையை ஏற்றுக் கொள்கின்றனர் என்பது சாஸ்திரங்கள் நமக்கு உரைத்திடும் உண்மைகள்.

👉 சில சடங்குகளுக்கும் சில வழிமுறைகளுக்கும் அமாவாசை அன்று சிறந்தது. அதில் ஒன்று தான் பித்ரு தர்ப்பணம். முன்னோர்களில் மூன்று தலைமுறையினரையாவது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தால் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஐதீகம். நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மை சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது. அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும்.

காகத்திற்கு உணவிடுங்கள் :

👉 காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு. காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை.

👉 தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பிற காக்கைகளையும் கரைந்து அழைத்த பின்னரே, காகம் உணவு உண்ணும். அப்படிப்பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுவதன் மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும்.

👉 முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் வழங்குபவர் சூரியன். அந்த தேவதைகளே மறைந்த நம் முன்னோரிடம் பலன்களை சேர்க்கின்றன. அதனாலேயே சூரியனைப் பிதுர்காரகன் என்கிறோம். அமாவாசை நாட்களில் தீர்த்தங்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீர் விடுவது) மிகுந்த நன்மை தரும்.

👉 சமுத்திரத்தில் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்று கொண்டு, சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் சூரியனின் அருளைப் பூரணமாக பெறமுடியும்

வியாழன், 15 மார்ச், 2018

bharathegopu.business.site

வேண்டிய வரத்தை கொடுக்கும் அஷ்டமி விரதம் !
அஷ்டமி விரதம்
மனிதர்களின் வாழ்க்கையில் கஷ்டங்கள் ஏற்படுவது இயல்புதான். அப்படி நமக்கு ஓர் கஷ்டம் ஏற்படும்போது நாம் சோர்ந்து போகவேண்டாம், துவண்டுவிடவும் வேண்டாம். சிவபெருமானின் அம்சமாகத் தோன்றிய பைரவரை வழிபட்டு, ஆபத்துகளில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் விடுபடலாம்.

💠 ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபட்சத்து அஷ்டமியில் விரதமிருந்து பரமேஸ்வரனை பூஜிப்பதே அஷ்டமி விரதமாகும்.

💠 அஷ்டமி என்பது எட்டாவது திதி. அதிலும் தேய்பிறையில் வரும் அஷ்டமி மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. இந்த விரதம் தொடங்குபவர்கள் மார்கழி மாதத்தில் தேய்பிறையில் வரும் அஷ்டமியில் ஆரம்பிக்க வேண்டும்.

💠 அஷ்டமி வழிபாடு, ஆபத்திலிருந்து காக்கும் என்பார்கள். அஷ்டமி வழிபாடு பைரவருக்கு இஷ்டமானது.

💠 அதிலும் தேய்பிறை அஷ்டமி என்பது மரண பயத்தை நீக்கும் அற்புதமான வழிபாடு. தேய்பிறை அஷ்டமி செவ்வாய்க்கிழமை வந்தால் இன்னும் விசேஷம், அன்றைய தினம் பைரவரை வணங்கிட, வேண்டும் வரங்கள் எல்லாம் கிடைக்கும்.

💠 சகல சௌபாக்யங்களும் தரும் விரதம் என்று சூத முனிவர் நைமிசாரண்யத்திலுள்ள முனிவர்களுக்கு கூறிய விரதம் அஷ்டமி விரதமாகும். ஆரோக்கியமாக உடல் குறைபாடின்றி இருக்க விரும்புவர்கள் எல்லா அஷ்டமி தினங்களிலும் விரதம் இருந்து பலன் பெறலாம்.

💠 சனீஸ்வரனின் குருவாகவும், காலத்தை கட்டுப்படுத்திடும் தேவனாகவும் இருப்பவர் பைரவர். 12 ராசிகள், அஷ்ட திக்குகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்கள் என எல்லாவற்றையும் கண்காணிக்கும் ஆதி தெய்வம் பைரவர். காசி நகரமே பைரவரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், அதனால்தான் அங்கு இறப்பவருக்கு மோட்சம் கிடைப்பதாகவும் சொல்லப்படுகிறது.

💠 எட்டு தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்தால் எந்தத் துன்பமானாலும் விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஆன்றோர்கள் வாக்கு. தேய்பிறை அஷ்டமி திதிகளில் சிகப்பு நிற ஆடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, செந்நிற மலர்களை கொண்டு அர்ச்சித்து, வெள்ளை பூசணியில் நெய் தீபம் ஏற்றி வர நல்ல பலன் கிடைக்கும். சனி மாற்றத்தால் அசுப பலன் ஏற்படக்கூடிய ராசிக்காரர்களும் சனி திசைஃ புக்தி நடப்பவர்களும் தினமும் ஸ்ரீ கால பைரவர் வழிபாடு மற்றும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு மேற்கொள்ளுவதும் சிறப்பு.

Google.com/+bharathegopu

புதன், 14 மார்ச், 2018

குளிக்கும் முறை அகத்தியர் கூற்று*

*குளிக்கும் முறை  அகத்தியர் கூற்று*

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள்.  (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம்.  மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல் நோவு வரும்).

தினமும் கங்கா ஸ்நானம் செய்யமுடியும்.  குளிக்கும் முன் ஒரு குவளை தண்ணீரில் மோதிரவிரலால் "ஓம்" என்று த்யானம் செய்து எழுதுங்கள்.  அந்த நீர் அப்போதுமுதல் கங்கை நீராக மாறிவிடும்.  ஒரு நிமிட த்யானத்தில் "இந்த உடலுக்குள் நீங்களே வந்திருந்து, இதை உங்களுக்கு செய்யும் அபிஷேகமாக ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று இறையிடம் வேண்டிக்கொண்டு குளித்தால், உள்பூசையின் அங்கமாக இறைவனுக்கு அபிஷேகமும் ஆகிவிடும்.  குளிப்பது, உண்மையிலேயே நாமாக இருக்காது.

அக்னி எப்போதும் மேல்நோக்கியே பயணிக்கும்.  உடலுக்குள் இருக்கும் அக்னி கீழிருந்து மேல்  ஏறுவதுதான் சரி.  தண்ணீரை கால் முதல் மேல் நோக்கி நனைத்து வந்து கடைசியில் தலையில் ஊற்றிக் கொள்ளவேண்டும். 

நமது மண்டை ஓடுக்கு எப்படிப்பட்ட அக்னியின் வேகத்தையும் தாங்குகிற சக்தி உண்டு.  காலிலிருந்து பரவும் குளிரிச்சி மேல் நோக்கி பயணிக்கும் போது உள் அக்னியானது தலையை நோக்கி பயணிக்கும்.  அதுவே சரியான முறை.

 தலை முதல் கால் வரை உள்ள பின் பாகத்தை "பிரஷ்டம்" என்பர்.  அதில் நம் முதுகு பாகம் தான் மிகப்பெரியது.  அங்கு தான் அக்னியின் வீச்சம் கூடுதல் வேகமாக பரவும். ஆதலால், குளித்து முடித்தவுடன், முதலில் முதுகு பாகத்தைதான் துவட்ட வேண்டும். 

துவலையை (துண்டு) குளிக்கும் நீரிலே நனைத்து பிழிந்து துவட்டுவது தான் உத்தமம்.  அனேகமாக, அனைவரும் ஈரம் படாத துண்டைத்தான் உபயோகிப்பீர்கள்.  உலர்ந்த துணியானது உள் சூட்டை வேகமாக பரவச்செய்து பல வித உள் நோவுகளை உருவாக்கும்.

பிறருடன் வாய் திறந்து பேசக்கூடாத மூன்று நேரங்களில் ஒன்று, குளிக்கும் நேரம்.  மௌனத்தை கடைபிடிக்கலாம், அல்லது மனதளவில் தெரிந்த ஜெபத்தை செய்யலாம்.

         குளிப்பதினால், பஞ்ச இந்த்ரியகளால் செய்த தவறுகளினால் நமக்குள் சேர்த்து வைத்துள்ள கர்மாக்கள் களையப் பெறுகிறது.
 தண்ணீர் உடலை தழுவி, கழுவி சுத்தப்படுத்தி, நம்மை, நம் மூலத்திற்கு அழைத்துச் செல்லுகிறது.  குளித்தபின் நாம் இருக்கும் நிலையே மனிதனின் சுத்த நிலை.  அதை உணரவேண்டும்.

குளிக்கும் போது, வாயில் கொள்ளளவு நீரை வைத்து குளித்தபின் துப்புவதால், கண்டத்துக்குமேல் (கழுத்துக்கு) வருகிற நீர் சம்பந்தமான கட்டுகளை, நோய்களை தவிர்க்கலாம்.  வாயில் இருக்கும் நீர் மேல் நோக்கி எழும்பும் அக்னியின் வேகத்தை எடுத்துவிடும்.

நீர் நிலைகள், குளம், ஆறு, கடல் இவைகளில் எல்லா தேவதைகளும், பெரியவர்களும் அரூபமாக ஸ்நானம் செய்வதாக கூறுகிறார்கள்.  நாரம் என்கிற தண்ணீரில் நாராயணன் வாசம் செய்வதாகவும் சொல்வார்கள். ஆதலால், ஓடி சென்று அதில் குதிக்காமல், கரையில் நின்று, சிறிது நீரை எடுத்து தலையில் தெளித்தபின், நீர் கலங்காமல், ஒரு இலை நீரில் விழுகிற வேகத்தில் மெதுவாக இறங்கி சென்று குளிக்கவேண்டும்.

நீரில் காரி உமிழ்வதோ, துப்புவதோ கூடாது.  நீரின்றி ஒரு உயிரும் இல்லை.
நீரை விரயம் செய்ய கடன் அதிகரிக்கும்.
உப்பு நீர் ஸ்நானம் திருஷ்டி தோஷங்களை அறுக்கும்.  வெள்ளியன்று குளிப்பது நல்லது.


Google.com/+bharathegopu



தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன் தெரியுமா?



⭐ பொதுவாக கோவிலிற்கு செல்லும் பக்தர்கள் அர்ச்சனை செய்வதற்காக தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை படைப்பார்கள். அது ஏன் என்று நீங்கள் யோசித்ததுண்டா?. அதைப் பற்றி இங்கு காண்போம்.

⭐ எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். இதற்கு காரணம் மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, விதையை எறிந்தால் மீண்டும் முளைக்கும்.

⭐ ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது.

⭐ எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு! என வேண்டவே, நாம் கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கின்றோம். அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு.

⭐ அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை. மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, விதையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது.

⭐ ஆனால், தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத்தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அது போல, வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும்.

⭐ அப்படி நமது எச்சில் படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள். இதனாலேயே நாமும் இந்த மரபினைப் பின்பற்றி வருகிறோம்.

வாஸ்து

🔹 கணவன், மனைவி பிரிந்து வாழ்வது எதனால்? அவர்களுக்கு அப்படியொரு சூழ்நிலை ஏற்பட வாஸ்து சாஸ்திரத்தில் அவர்கள் வீட்டு அமைப்பு ஏதேனும் தவறு உண்டா? என்பது பற்றி அறிந்து கொள்வோம்.

🔹 நமது சமுதாயம் பல நூற்றாண்டுகளாக கூட்டுக்குடும்பமாகவே நாமெல்லாம் இருந்து வந்துள்ளோம். ஆனால் கடந்த 40 முதல் 50 வருடங்களில்தான் இந்த தனிக்குடித்தனம் என்கிற முறை மிகவும் தீவிரமடைந்திருக்கிறது. அதேபோல் கடைசி வரைக்கும் வரக்கூடிய உறவில் கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவன் மட்டுமே. நீங்கள் எத்தனை வாரிசுகளைப் பெற்றிருந்தாலும் அவர்கள், அவர்களின் குடும்பத்தை மட்டுமே பார்த்துக் கொள்ள முடிகிறது. அப்படிப்பட்ட மிக நெருக்கமான உறவானது கணவன், மனைவி உறவு.

🔹 ஒரு வீட்டில் உள்ள கணவன், மனைவி பிரிவில் பல வகைகள் உண்டு.

1. வேலைக்காக வெளியூர் போய் விடுதல், மாதம் ஒரு முறை அல்லது 2 மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே வீட்டிற்கு வருதல், ஆண், பெண் இருவருக்குமே இது பொருந்தும்.

2. ஆண், பெண் இருவரில், ஒருவர் வேலைக்காக வெளிநாடு சென்று வருட கணக்கில் அங்கேயே தங்கி விடுதல்.

3. கணவனோ, மனைவியோ விவாகரத்து கேட்டு கோர்டில் வழக்கு போட்டு வருட கணக்கில் வழக்காடுதல்.

4. கணவன், மனைவி இருவருமே சேர்ந்து விவாகரத்து வாங்கிக் கொண்டு தனியாகப் பிரிந்து விடுதல்.

5. சில இடங்களில் கணவனைப் பிரிந்து மனைவி மட்டும் தன்னுடைய தாய் தந்தையுடன் சிறிது காலம் தங்கி விடுதல்.

6. சில சமயம் கணவன், மனைவிக்குள் நிரந்தர பிரிவு ஏற்படுதல் அதாவது இறந்து விடுதல்.

7. குழந்தைப் பேறுக்காக தாய் வீட்டுக்கு வந்த மனைவியை திரும்ப கூப்பிடாத கணவர்மார்களும் உண்டு.

🔹 நான் மேலே குறிப்பிட்ட இத்தனை பிரிதலுக்கும், நாம் வசிக்கக்கூடிய வீடே காரணம் என்பேன். அப்படிப்பட்ட நமது வீட்டின் தவறான அமைப்புகள்தான் என்ன என்பது பற்றி பார்ப்போம்.

1. தென்மேற்கு மாஸ்டர் பெட்ரூமை, பெட்ரூமாக பயன்படுத்தாமை.

2. தென்மேற்கில் பூஜையறை, சமையலறை, கழிவறை வருதல்.

3. தென்மேற்கு பகுதியில் தலைவாசல் அமைப்பு, போர்டிகோ அமைப்பு, கார்பார்க்கிங் அமைப்பு, செப்டிக் டேங்க் அமைப்பு.

4. தரைக்கு கீழ் தண்ணீர் தொட்டி அமைப்பு.

5. தென்மேற்கு தெருகுத்து 1. தெற்கு 2. மேற்கு என இருபக்கமும் தெருகுத்து வருவது. தென்கிழக்கு, கிழக்கு தெருகுத்து வருவது, வடமேற்கு வடக்கு தெருகுத்து வருவது.

6. தென்மேற்கு தெரு பார்வை வருவது.

7. மொத்த இடத்தில் வடகிழக்கு பகுதியில் வீட்டை அமைத்துவிட்டு தென்மேற்கு பகுதி முழுவதும் காலியாக விட்டுவிடுவதும் ஒரு காரணம்.

🔹 இதேபோல் இன்னும் சில தவறுகளை என்னால் குறிப்பிட முடியும். உங்களுடைய வாழ்க்கையில் இதுபோல ஏதாவது பிரச்சனை இருக்குமானால், உங்களுடைய கடந்த காலத்தை உற்று நோக்குங்கள். பிரச்சனைக்கான காரணம் புரிய வரும்.

🔹 அனுபவம் வாய்ந்த வாஸ்து நிபுணரின் உதவியால் உங்களுடைய வீட்டை சரியாக அமைத்துக் கொண்டு நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் கூட்டுக் குடும்பமாக வாழ வாழ்த்துக்கள்.

பிரதோஷ வழிபாடு !!


நினைத்ததை நிறைவேற்றும் பிரதோஷ வழிபாடு !!



👉 பிரதோஷம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோஷ காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோஷ வழிபாடு எனவும், பிரதோஷ தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோஷ விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது.

👉 பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.

பிரதோஷ பலன்கள் :

👉 தினந்தோறும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை நேரத்தில் சிவனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும்.

👉 பிரதோஷ விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவபெருமானின் அருள் கிடைக்கும்.

👉 சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான்.

👉 பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்கும். எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனை அபிஷேகம் செய்து, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.

👉 காராம்பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என்பது ஐதீகம்.

👉 பிரதோஷ விரதம் மேற்கொண்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். வறுமை நீங்கி செல்வம் பெருகும். மேலும், தொழில் மேன்மை அடையும், கடன் பிரச்சனை தீரும். போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும்.

👉 பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று பூஜையில் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.

👉 பிரதோஷம் திங்கட்கிழமையில் வரும்போது சோம பிரதோஷம் என்றும் சனிக்கிழமையில் வரும்போது சனிப் பிரதோஷம் என்றும் கூறுவர். இவ்விரண்டு பிரதோஷ நாட்களும் மிகச் சிறப்பானது.


இந்த நட்சத்திரங்கள் வரும் நாளில் பணத்தை கொடுத்தால் திரும்ப வராது !

⭐ பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சித்திரை, சுவாதி, மகம் இந்த 12 நட்சத்திரங்கள் வரும் நாட்களில் பணம் கொடுத்தால் திரும்ப வராது.

திருமணம் செய்தால் ஒரே நட்சத்திரமாக இருந்தாலும் கூட நன்மை உண்டாகும் நட்சத்திரங்கள் :

⭐ ரோகிணி, திருவாதிரை, மகம், அஸ்தம், விசாகம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி இவை ஒரே நட்சத்திரமானால் திருமணம் செய்யலாம் மிகவும் உத்தமம்.

திருமணம் செய்தால் ஒரே நட்சத்திரமாக இருந்தாலும் கூட சுமாரான வாழ்வை பெறும் நட்சத்திரங்கள் :

⭐ அசுவினி, கார்த்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், பூரம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம் இவை ஒரே நட்சத்திரமானால் மத்திமம் திருமணம் செய்யலாம்.

திருமணம் செய்தால் ஒரே நட்சத்திரமாக இருந்தாலும் கூட திருமணம் செய்யக்கூடாத நட்சத்திரங்கள் :

⭐ பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி இவை ஒரே நட்சத்திரமானால் கண்டிப்பாக திருமணம் செய்யக்கூடாது.

⭐ இருவருக்கும் ஒரே நட்சத்திரம் செய்யக் கூடியதாக இருந்தாலும், பெண்ணின் நட்சத்திரத்தின் பாதம், ஆணுடைய நட்சத்திர பாதத்தை விட அடுத்த பாதமாக இருப்பது சிறப்பு.






தமிழில்

திங்கள், 12 மார்ச், 2018

வீட்டில் ஓடாத கடிகாரங்கள், வரவேற்பறையில் பாரதப்போர் படங்கள் வாஸ்து குற்றங்களைத் தரும். வாஸ்துமீனை தொட்டியில் வைத்து வீட்டில் வளர்ப்பதோ கூடாது. அப்படி வளர்த்தால் மன அமைதி குறையும். கடன் தொல்லை கூடும்.

மீன் தொட்டி வைப்பது என்பது பழமையான எந்த விதமான வாஸ்து சாஸ்திர நூல்களிலும் குறிப்பிடவில்லை. வாஸ்து ஆராய்ச்சியில் மீன் தொட்டி எந்தவிதமான நல்ல பலனையும் தருவதில்லை. மாறாக வீட்டில் உள்ள யாரவது ஒருத்தருக்கு உடல்நிலை பாதிக்கிறது.

அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளில் வளர்க்கலாம். ஈசான்யத்தில் நீர் ஆதாரம் இருந்தாலே போதும். சாஸ்திரங்களில் விலக்கப்பட்ட ஒன்றை நாமும் விலக்குவது நல்லது.

வீட்டு முகப்பில் மணி பிளாண்ட்கொடியை போல படரவிட்டால் அந்த வீட்டில் தீயசக்திகள் நடமாட்டம் கூடும்.

வாழ்க்கையில் அலுவலகம், குடும்பத்தில் ஒத்துப்போவதை போல இயற்கை யோடு ஒத்துப்போவதே வாஸ்து ஆகும்.

வீட்டில் குபேரபொம்மைகள், தவளை, தலைக்கு மேல் வேல் உள்ள முருகன் படம், ஒரு அடிக்குமேல் சிலைகளும் வைக்கக்கூடாது.

கடைகளுக்கான வியாபாரமனை வாஸ்துப்படி சதுரமாகவோ நீள் சதுரமாகவோ அமையலாம். வடக்கு கிழக்கு அதிகாமான இடம் விட வேண்டும். கடையில் பூஜை செய்தால் கிழக்கு பார்த்து வைக்கலாம். வாஸ்து தோஷங்கள் நீங்கிட வாஸ்து பரிகார எந்திரங்களும் பயன்படுத்தலாம்.