புதன், 14 மார்ச், 2018

குளிக்கும் முறை அகத்தியர் கூற்று*

*குளிக்கும் முறை  அகத்தியர் கூற்று*

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள்.  (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம்.  மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல் நோவு வரும்).

தினமும் கங்கா ஸ்நானம் செய்யமுடியும்.  குளிக்கும் முன் ஒரு குவளை தண்ணீரில் மோதிரவிரலால் "ஓம்" என்று த்யானம் செய்து எழுதுங்கள்.  அந்த நீர் அப்போதுமுதல் கங்கை நீராக மாறிவிடும்.  ஒரு நிமிட த்யானத்தில் "இந்த உடலுக்குள் நீங்களே வந்திருந்து, இதை உங்களுக்கு செய்யும் அபிஷேகமாக ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று இறையிடம் வேண்டிக்கொண்டு குளித்தால், உள்பூசையின் அங்கமாக இறைவனுக்கு அபிஷேகமும் ஆகிவிடும்.  குளிப்பது, உண்மையிலேயே நாமாக இருக்காது.

அக்னி எப்போதும் மேல்நோக்கியே பயணிக்கும்.  உடலுக்குள் இருக்கும் அக்னி கீழிருந்து மேல்  ஏறுவதுதான் சரி.  தண்ணீரை கால் முதல் மேல் நோக்கி நனைத்து வந்து கடைசியில் தலையில் ஊற்றிக் கொள்ளவேண்டும். 

நமது மண்டை ஓடுக்கு எப்படிப்பட்ட அக்னியின் வேகத்தையும் தாங்குகிற சக்தி உண்டு.  காலிலிருந்து பரவும் குளிரிச்சி மேல் நோக்கி பயணிக்கும் போது உள் அக்னியானது தலையை நோக்கி பயணிக்கும்.  அதுவே சரியான முறை.

 தலை முதல் கால் வரை உள்ள பின் பாகத்தை "பிரஷ்டம்" என்பர்.  அதில் நம் முதுகு பாகம் தான் மிகப்பெரியது.  அங்கு தான் அக்னியின் வீச்சம் கூடுதல் வேகமாக பரவும். ஆதலால், குளித்து முடித்தவுடன், முதலில் முதுகு பாகத்தைதான் துவட்ட வேண்டும். 

துவலையை (துண்டு) குளிக்கும் நீரிலே நனைத்து பிழிந்து துவட்டுவது தான் உத்தமம்.  அனேகமாக, அனைவரும் ஈரம் படாத துண்டைத்தான் உபயோகிப்பீர்கள்.  உலர்ந்த துணியானது உள் சூட்டை வேகமாக பரவச்செய்து பல வித உள் நோவுகளை உருவாக்கும்.

பிறருடன் வாய் திறந்து பேசக்கூடாத மூன்று நேரங்களில் ஒன்று, குளிக்கும் நேரம்.  மௌனத்தை கடைபிடிக்கலாம், அல்லது மனதளவில் தெரிந்த ஜெபத்தை செய்யலாம்.

         குளிப்பதினால், பஞ்ச இந்த்ரியகளால் செய்த தவறுகளினால் நமக்குள் சேர்த்து வைத்துள்ள கர்மாக்கள் களையப் பெறுகிறது.
 தண்ணீர் உடலை தழுவி, கழுவி சுத்தப்படுத்தி, நம்மை, நம் மூலத்திற்கு அழைத்துச் செல்லுகிறது.  குளித்தபின் நாம் இருக்கும் நிலையே மனிதனின் சுத்த நிலை.  அதை உணரவேண்டும்.

குளிக்கும் போது, வாயில் கொள்ளளவு நீரை வைத்து குளித்தபின் துப்புவதால், கண்டத்துக்குமேல் (கழுத்துக்கு) வருகிற நீர் சம்பந்தமான கட்டுகளை, நோய்களை தவிர்க்கலாம்.  வாயில் இருக்கும் நீர் மேல் நோக்கி எழும்பும் அக்னியின் வேகத்தை எடுத்துவிடும்.

நீர் நிலைகள், குளம், ஆறு, கடல் இவைகளில் எல்லா தேவதைகளும், பெரியவர்களும் அரூபமாக ஸ்நானம் செய்வதாக கூறுகிறார்கள்.  நாரம் என்கிற தண்ணீரில் நாராயணன் வாசம் செய்வதாகவும் சொல்வார்கள். ஆதலால், ஓடி சென்று அதில் குதிக்காமல், கரையில் நின்று, சிறிது நீரை எடுத்து தலையில் தெளித்தபின், நீர் கலங்காமல், ஒரு இலை நீரில் விழுகிற வேகத்தில் மெதுவாக இறங்கி சென்று குளிக்கவேண்டும்.

நீரில் காரி உமிழ்வதோ, துப்புவதோ கூடாது.  நீரின்றி ஒரு உயிரும் இல்லை.
நீரை விரயம் செய்ய கடன் அதிகரிக்கும்.
உப்பு நீர் ஸ்நானம் திருஷ்டி தோஷங்களை அறுக்கும்.  வெள்ளியன்று குளிப்பது நல்லது.


Google.com/+bharathegopu



தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன் தெரியுமா?



⭐ பொதுவாக கோவிலிற்கு செல்லும் பக்தர்கள் அர்ச்சனை செய்வதற்காக தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை படைப்பார்கள். அது ஏன் என்று நீங்கள் யோசித்ததுண்டா?. அதைப் பற்றி இங்கு காண்போம்.

⭐ எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். இதற்கு காரணம் மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, விதையை எறிந்தால் மீண்டும் முளைக்கும்.

⭐ ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது.

⭐ எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு! என வேண்டவே, நாம் கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கின்றோம். அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு.

⭐ அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை. மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, விதையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது.

⭐ ஆனால், தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத்தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அது போல, வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும்.

⭐ அப்படி நமது எச்சில் படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள். இதனாலேயே நாமும் இந்த மரபினைப் பின்பற்றி வருகிறோம்.

வாஸ்து

🔹 கணவன், மனைவி பிரிந்து வாழ்வது எதனால்? அவர்களுக்கு அப்படியொரு சூழ்நிலை ஏற்பட வாஸ்து சாஸ்திரத்தில் அவர்கள் வீட்டு அமைப்பு ஏதேனும் தவறு உண்டா? என்பது பற்றி அறிந்து கொள்வோம்.

🔹 நமது சமுதாயம் பல நூற்றாண்டுகளாக கூட்டுக்குடும்பமாகவே நாமெல்லாம் இருந்து வந்துள்ளோம். ஆனால் கடந்த 40 முதல் 50 வருடங்களில்தான் இந்த தனிக்குடித்தனம் என்கிற முறை மிகவும் தீவிரமடைந்திருக்கிறது. அதேபோல் கடைசி வரைக்கும் வரக்கூடிய உறவில் கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவன் மட்டுமே. நீங்கள் எத்தனை வாரிசுகளைப் பெற்றிருந்தாலும் அவர்கள், அவர்களின் குடும்பத்தை மட்டுமே பார்த்துக் கொள்ள முடிகிறது. அப்படிப்பட்ட மிக நெருக்கமான உறவானது கணவன், மனைவி உறவு.

🔹 ஒரு வீட்டில் உள்ள கணவன், மனைவி பிரிவில் பல வகைகள் உண்டு.

1. வேலைக்காக வெளியூர் போய் விடுதல், மாதம் ஒரு முறை அல்லது 2 மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே வீட்டிற்கு வருதல், ஆண், பெண் இருவருக்குமே இது பொருந்தும்.

2. ஆண், பெண் இருவரில், ஒருவர் வேலைக்காக வெளிநாடு சென்று வருட கணக்கில் அங்கேயே தங்கி விடுதல்.

3. கணவனோ, மனைவியோ விவாகரத்து கேட்டு கோர்டில் வழக்கு போட்டு வருட கணக்கில் வழக்காடுதல்.

4. கணவன், மனைவி இருவருமே சேர்ந்து விவாகரத்து வாங்கிக் கொண்டு தனியாகப் பிரிந்து விடுதல்.

5. சில இடங்களில் கணவனைப் பிரிந்து மனைவி மட்டும் தன்னுடைய தாய் தந்தையுடன் சிறிது காலம் தங்கி விடுதல்.

6. சில சமயம் கணவன், மனைவிக்குள் நிரந்தர பிரிவு ஏற்படுதல் அதாவது இறந்து விடுதல்.

7. குழந்தைப் பேறுக்காக தாய் வீட்டுக்கு வந்த மனைவியை திரும்ப கூப்பிடாத கணவர்மார்களும் உண்டு.

🔹 நான் மேலே குறிப்பிட்ட இத்தனை பிரிதலுக்கும், நாம் வசிக்கக்கூடிய வீடே காரணம் என்பேன். அப்படிப்பட்ட நமது வீட்டின் தவறான அமைப்புகள்தான் என்ன என்பது பற்றி பார்ப்போம்.

1. தென்மேற்கு மாஸ்டர் பெட்ரூமை, பெட்ரூமாக பயன்படுத்தாமை.

2. தென்மேற்கில் பூஜையறை, சமையலறை, கழிவறை வருதல்.

3. தென்மேற்கு பகுதியில் தலைவாசல் அமைப்பு, போர்டிகோ அமைப்பு, கார்பார்க்கிங் அமைப்பு, செப்டிக் டேங்க் அமைப்பு.

4. தரைக்கு கீழ் தண்ணீர் தொட்டி அமைப்பு.

5. தென்மேற்கு தெருகுத்து 1. தெற்கு 2. மேற்கு என இருபக்கமும் தெருகுத்து வருவது. தென்கிழக்கு, கிழக்கு தெருகுத்து வருவது, வடமேற்கு வடக்கு தெருகுத்து வருவது.

6. தென்மேற்கு தெரு பார்வை வருவது.

7. மொத்த இடத்தில் வடகிழக்கு பகுதியில் வீட்டை அமைத்துவிட்டு தென்மேற்கு பகுதி முழுவதும் காலியாக விட்டுவிடுவதும் ஒரு காரணம்.

🔹 இதேபோல் இன்னும் சில தவறுகளை என்னால் குறிப்பிட முடியும். உங்களுடைய வாழ்க்கையில் இதுபோல ஏதாவது பிரச்சனை இருக்குமானால், உங்களுடைய கடந்த காலத்தை உற்று நோக்குங்கள். பிரச்சனைக்கான காரணம் புரிய வரும்.

🔹 அனுபவம் வாய்ந்த வாஸ்து நிபுணரின் உதவியால் உங்களுடைய வீட்டை சரியாக அமைத்துக் கொண்டு நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் கூட்டுக் குடும்பமாக வாழ வாழ்த்துக்கள்.

பிரதோஷ வழிபாடு !!


நினைத்ததை நிறைவேற்றும் பிரதோஷ வழிபாடு !!



👉 பிரதோஷம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோஷ காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோஷ வழிபாடு எனவும், பிரதோஷ தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோஷ விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது.

👉 பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.

பிரதோஷ பலன்கள் :

👉 தினந்தோறும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை நேரத்தில் சிவனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும்.

👉 பிரதோஷ விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவபெருமானின் அருள் கிடைக்கும்.

👉 சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான்.

👉 பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்கும். எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனை அபிஷேகம் செய்து, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.

👉 காராம்பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என்பது ஐதீகம்.

👉 பிரதோஷ விரதம் மேற்கொண்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். வறுமை நீங்கி செல்வம் பெருகும். மேலும், தொழில் மேன்மை அடையும், கடன் பிரச்சனை தீரும். போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும்.

👉 பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று பூஜையில் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.

👉 பிரதோஷம் திங்கட்கிழமையில் வரும்போது சோம பிரதோஷம் என்றும் சனிக்கிழமையில் வரும்போது சனிப் பிரதோஷம் என்றும் கூறுவர். இவ்விரண்டு பிரதோஷ நாட்களும் மிகச் சிறப்பானது.


இந்த நட்சத்திரங்கள் வரும் நாளில் பணத்தை கொடுத்தால் திரும்ப வராது !

⭐ பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சித்திரை, சுவாதி, மகம் இந்த 12 நட்சத்திரங்கள் வரும் நாட்களில் பணம் கொடுத்தால் திரும்ப வராது.

திருமணம் செய்தால் ஒரே நட்சத்திரமாக இருந்தாலும் கூட நன்மை உண்டாகும் நட்சத்திரங்கள் :

⭐ ரோகிணி, திருவாதிரை, மகம், அஸ்தம், விசாகம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி இவை ஒரே நட்சத்திரமானால் திருமணம் செய்யலாம் மிகவும் உத்தமம்.

திருமணம் செய்தால் ஒரே நட்சத்திரமாக இருந்தாலும் கூட சுமாரான வாழ்வை பெறும் நட்சத்திரங்கள் :

⭐ அசுவினி, கார்த்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், பூரம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம் இவை ஒரே நட்சத்திரமானால் மத்திமம் திருமணம் செய்யலாம்.

திருமணம் செய்தால் ஒரே நட்சத்திரமாக இருந்தாலும் கூட திருமணம் செய்யக்கூடாத நட்சத்திரங்கள் :

⭐ பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி இவை ஒரே நட்சத்திரமானால் கண்டிப்பாக திருமணம் செய்யக்கூடாது.

⭐ இருவருக்கும் ஒரே நட்சத்திரம் செய்யக் கூடியதாக இருந்தாலும், பெண்ணின் நட்சத்திரத்தின் பாதம், ஆணுடைய நட்சத்திர பாதத்தை விட அடுத்த பாதமாக இருப்பது சிறப்பு.






தமிழில்